என் பேரனின் படிப்பு போச்சு.. தனுஷ்தான் காரணம்.. அட்டாக் செய்த தந்தை கஸ்தூரி ராஜா.. ரசிகர்கள் ஷாக்
சென்னை: தனுஷ் நடிப்பில் இட்லி கடை, குபேரா ஆகிய படங்களின் பணிகள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கின்றன. அவர் இப்போது தேரே இஷ்க் மெய்ன் என்கிற ஹிந்தி படத்தில் நடித்துவருகிறார். அந்தப் படத்தை ஆனந்த் எல். ராய் இயக்கிவருகிறார். கீர்த்தி சனோன் ஹீரோயினாக நடிக்கிறார். இதற்கிடையே தனது சகோதரி மகன் பவிஷை ஹீரோவாக வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்கினார் தனுஷ். ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்து அப்செட்டாக்கியது.
தனுஷின் நடிப்பில் கடைசியாக ராயன் திரைப்படம் வெளியானது. அவரே இயக்கி நடித்திருந்த அந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவம் பெரிய செலவு செய்து தயாரித்தது. தனுஷுடன் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா, சரவணன், செல்வராகவன் என ஏராளமானோர் நடித்திருந்தார்கள். அது அவருடைய 50ஆவது படம் என்பதாலும்; பவர் பாண்டி ஹிட்டுக்கு பிறகு தனுஷ் இயக்கும் படம் என்பதாலும் படத்தின் மீது உச்சக்கட்டமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.

படுதோல்வி: ஆனால் அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. வானத்தைப் போல, வடசென்னை போன்ற படங்களின் காக்டெயில்தான் ராயன் என்று ரசிகர்கள் ஓபனாக பேசினார்கள். படம் தோல்வி என்பதைத் தாண்டி கடுமையான ட்ரோலை சந்தித்தது. பவர் பாண்டி போல் கதையில் எந்தவிதமான கவனமும் செலுத்தாமல் ராயனை தனுஷ் இயக்கியதுதான் படத்தின் இந்த ரிசல்ட்டுக்கு காரணம் என்றும் பேச்சுக்கள் எழுந்தன. தன்னுடைய 50ஆவது படம் இப்படி ஒரு தோல்வி படமாக அமைந்ததை நினைத்து கண்டிப்பாக அவர் வருத்தம்தான் பட்டிருப்பார்.
நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்: ராயன் படத்தை இயக்கிக்கொண்டிருந்தபோது இயக்குநராக தனது அடுத்த பட வேலைகளை தொடங்கினார். படத்துக்கு நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்று கவித்துவமான பெயரையும் வைத்தார். இதில் தனது சகோதரி மகன் பவிஷை ஹீரோவாக களமிறக்க திட்டமிட்டார். இந்த அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் இயக்குநராக ராயன் படத்தில் தோல்வியடைந்த தனுஷுக்கு ஏன் மீண்டும் இந்த வேண்டாத வேலை நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தலாமே என்று அக்கறையோடு பேச ஆரம்பித்தார்கள்.
இந்தப் படமும் தோல்வி: இருப்பினும் பவிஷ், அனிகா உள்ளிட்டோரை வைத்து படத்தின் ஷூட்டிங்கை முடித்து ரிலீஸும் செய்தார். சரி ராயனில் விட்டதை இதிலாவது பிடிப்பாரா என்று அவரது ரசிகர்கள் ஆவலோடு தியேட்டர்களுக்கு படம் பார்க்க சென்றார்கள். ஆனால் பெரும்பாலான ரசிகர்களுக்கு படம் திருப்தி தரவில்லை. பவிஷும் சொல்லிக்கொள்ளும்படியாக நடிக்கவில்லை என்றும் பேசப்பட்டது. அதேசமயம் ரசிகர்களில் ஒருதரப்பினரோ டிராகன் படத்துக்கு போட்டியாக இந்தப் படத்தை தனுஷ் இறக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக இந்தப் படம் ஓரளவுக்கு டீசண்ட்டான வரவேற்பை பெற்றிருக்கும் என்றும் கூறினார்கள்.

கஸ்தூரி ராஜா வேதனை: இந்நிலையில் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா சமீபத்தில் ஒரு பட நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது மேடையில் பேசிய அவர், "என் பேரன் பவிஷ் ஹீரோவாக நடித்திருக்கிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்தில் நடித்திருக்கிறார். மூன்றாவது தலைமுறை இப்போது வந்துவிட்டது. அவன் 12ஆம் வகுப்பு படிக்கிறான். அருமையான மாணவன். ஆனால் அவனுடைய மாமா தனுஷோ பவிஷின் படிப்பை நிறுத்திவிட்டு நடிக்க அழைத்து சென்றுவிட்டார்" என்றார்.
ரசிகர்கள் ஷாக்: கஸ்தூரி ராஜாவின் இந்தப் பேச்சு ரசிகர்களிடையே ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது ஒருவரின் படிப்பை நிறுத்திவிட்டுத்தான் நடிக்க வைக்க வேண்டுமா?.. இதெல்லாம் ரொம்ப தவறு.. படிப்பு மட்டும்தான் காலம் முழுவதும் ஒருவருக்கு உதவும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட்ஸ் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் மேடையில் வைத்து கஸ்தூரி ராஜா தனுஷை பற்றி இப்படி ஓபனாக பேசிவிட்டாரே என்றும் காட்டத்துடன் கூறிவருகிறார்கள்.
முன்னதாக, காதல் கொண்டேன் படத்தில் நடித்த தனுஷை பாராட்டுவதற்காக நேரில் முதன்முறையாக சந்தித்தார் ஐஸ்வர்யா. அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பிறகு திருமணம் செய்ய முடிவெடுத்த தனுஷ்; தனது வீட்டாரிடமும், நண்பர்களிடமும் கூறினாராம். அப்படி சுசித்ராவிடமும் கூறியபோது இந்தத் திருமணம் வேண்டாம் என்று அவர் தடுத்ததாக சுசித்ராவே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ஆனால் ஐஸ்வர்யா மீது இருக்கும் காதலால் திருமணம் செய்துகொள்வது என்கிற உறுதியான முடிவில் இருந்தார் தனுஷ்.
நடந்த திருமணம்: இது ஒருபக்கம் இருக்க ஐஸ்வர்யாவின் வீட்டிலும் உடனடியாக சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் மகளின் உறுதித்தன்மையை பார்த்த ரஜினியும், லதாவும் திருமணத்துக்கு ஒத்துக்கொண்டார்கள். அதன்படி கடந்த 2004ஆம் ஆண்டு அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. அந்தத் திருமணம் நடந்தபோது திரைத்துறையில் பலரும் ஆச்சரியம்தான் பட்டார்கள். சினிமாவுக்குள் வந்து சில வருடங்களிலேயே சூப்பர் ஸ்டார் வீட்டு மருமகன் ஆகிவிட்டாரே என்று அனைவருமே புருவம் உயர்த்தினார்கள்.
வளர்ந்த திறமை: ரஜினி தன்னை மருமகனாக தேர்ந்தெடுத்ததை தவறு என்று ஆக்கிவிடக்கூடாது என நினைத்த தனுஷ்; தன்னுடைய திறமையை அசுரத்தனமாக வளர்த்து தனக்கென தனி அடையாளம் ஒன்றை உருவாக்கினார். இதன் காரணமாக அவருக்கும் ரசிகர்கள் பன்மடங்கு பெருகினார்கள். நடிப்பு மட்டுமின்றி இயக்கம், பாடல்கள் பாடுவது, எழுதுவது என அனைத்து ஏரியாக்களிலும் கலக்க ஆரம்பித்தார் தனுஷ். இப்போது பாலிவுட், ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார்.
விவாகரத்து: திருமணத்துக்கு பிறகு இரண்டு பேரும் தங்களது வாழ்க்கையை சுமூகமாகத்தான் நகர்த்திக்கொண்டிருந்தார்கள். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை; இரண்டு பேருக்கும் மனஸ்தாபம் உருவானது. நாட்கள் செல்ல செல்ல அந்த மனஸ்தாபம் குறைந்துவிடும் என்று எதிர்பார்த்தால் அதிகரிக்கவே செய்தது. எனவே பிரிந்துவிடுவதாக முடிவெடுத்தார்கள். எப்படியாவது அவர்களை சேர்த்துவைத்துவிட ரஜினிகாந்த் குடும்பமும், தனுஷ் குடும்பமும் ரொம்பவே மெனக்கெட்டார்கள். ஆனால் இரண்டு பேரும் விவாகரத்து மனுத்தாக்கல் செய்து; மனம் ஒத்து பிரிந்துவிட்டார்கள்.
அவர்களது பிரிவு பலரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களது மகன்கள் கோ பேரண்ட்டிங் முறையில் இரண்டு பேரிடமும் வளரவிருக்கிறார்கள். இதற்கிடையே தனுஷுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்க கஸ்தூரி ராஜா முடிவு செய்திருப்பதாகவும்; அதற்காக தன்னுடைய உறவுக்கார பெண் ஒருவரை பார்த்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடியதும்; ரஜினிகாந்த்தின் பெயரை வைத்து கஸ்தூரி ராஜா ஒருவரிடம் கடன் வாங்கினார். அதுதான் தனுஷ் குடும்பத்துக்கும், ரஜினிகாந்த்தின் குடும்பத்துக்கும் இடையே பிரச்னை ஏற்படுவதற்கான முதல் காரணம் என்று ஒரு தகவல் ஓடியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











