Selvaraghavan - அப்படியே விட்டிருந்தால் செல்வராகவன் பைத்தியம் ஆகிருப்பான்... போட்டுடைத்த தந்தை கஸ்தூரி ராஜா

சென்னை: Selvaraghavan (செல்வராகவன்) செல்வராகவன் குறித்து அவரது தந்தை கஸ்தூரி ராஜா பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.

செல்வராகவன் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநர்களில் ஒருவர். கஸ்தூரி ராஜா இயக்கிய துள்ளுவதோ இளமை பாதிக்கட்டத்தில் செல்வராகவன் கைகளுக்கு வந்தது. அதனையடுத்து தன்னுடைய பதின்ம வயதிலேயே எந்த வித பதற்றமுமின்றி அந்தப் படத்தை இயக்கி முடித்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் படத்துக்கு கைக்கொடுக்க ஓரளவு அடையாளப்பட்டது படம்.

Kasthuri Raja Talks about Director Selvaraghavan Unknown Side

காதல் கொண்டேன்: இரண்டாவது படமாக அவர் இயக்கிய காதல் கொண்டேன் திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படம்தான் தனுஷுக்குள் ஒரு சிறந்த நடிகர் இருக்கிறார் என்பதையும், செல்வராகவனுக்குள் மிகச்சிறந்த இயக்குநர் இருக்கிறார் என்பதையும் வெளிச்சம் போட்டு காண்பித்தது. இன்றுவரை அந்தப் படம் பலரால் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

முன்னணி இயக்குநர்: இரண்டாவது படத்தின் வெற்றியை அடுத்து செல்வராகவன் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார். அவரது இயக்கத்துக்கென்று பலர் ரசிகர்களாக மாறினர். அதற்கேற்றபடிதான் அவரது படங்களும் அமைந்தன. 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், ஏழாம் உலகம், மயக்கம் என்ன என செல்வராகவனின் இயக்கத்தில் வெளியான படங்கள் வெவ்வேறு ஜானரில் அட்டகாசமாக அமைந்திருந்தன.

நடிப்பில் கவனம்: இடையில் சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டு அவரை விவாகரத்து செய்த செல்வராகவன்; தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்குமான திருமணம் அன்போடு சென்றுகொண்டிருக்கிறது. இயகக்கத்திலிருந்து இப்போது ஒதுங்கியிருக்கும் அவர் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார்.

அப்படி அவர் பீஸ்ட், பகாசூரன், சாணிக்காயிதம், மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமின்றி ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2 ஆகிய படங்களையும் அவர் இயக்கவிருக்கிறார். கடைசியாக தனுஷ் எழுதிய கதையை நானே வருவேன் என்ற பெயரில் இயக்கினார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இருந்தாலும் செல்வராகவன் ஒரு இயக்குநராக கம்பேக் கொடுப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

கஸ்தூரி ராஜா பேட்டி: இந்நிலையில் செல்வராகவன் குறித்து கஸ்தூரி ராஜா பேசியிருக்கும் வீடியோ ஒன்று ட்ரெண்டாகியுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், "செல்வராகவனை அப்படியே விட்டிருந்தால் பைத்தியம் ஆகிருப்பான். கீதாஞ்சலி வந்த பிறகுதான் அவன் மாறியிருக்கிறான். சின்ன வயதில் அவனை கோயிலுக்கு அழைத்து செல்லும்போது, ஏன் கடைல போர்டு இருக்கு; ஏன் லைட் சிகப்பா எரியும்; ஏன் சம்பாதிக்கணும்; வாழ்க்கைனா என்ன என்று ஏகப்பட்ட கேள்விகளை கேட்டுக்கொண்டே இருப்பான். அவன் ஒரு நல்ல க்ரியேட்டர். இன்னமும் அவர் அந்த ஸோனில்தான் இருக்கிறான்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X