பிக் பாஸின் குட்டை உடைத்த கஸ்தூரி: அக்காவுக்கு 'தில்' தான்

By Siva

Recommended Video

Watch Video : Bigg Boss 3 Tamil : Promo 1 : Day 72

சென்னை: கஸ்தூரி பிக் பாஸ் பற்றி பிற போட்டியாளர்கள் சொல்லத் தயங்கிய விஷயத்தை சொல்லிவிட்டார்.

நடிகை கஸ்தூரி பிக் பாஸ் 3 வீட்டிற்கு சென்ற வேகத்தில் வெளியே வந்துவிட்டார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது மற்ற போட்டியாளர்களுக்கு செம டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்த்தால் அவரை காமெடி பீஸாக்கிவிட்டனர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கஸ்தூரி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

கஸ்தூரி

கஸ்தூரி

நான் 2 வாரங்களுக்கு தான் உடை எடுத்துச் சென்றிருந்தேன். பார்வையாளர்களுக்கு போட்டியாளர்கள் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் நான் அதே துறையை சேர்ந்தவள் என்பதால் எனக்கு அவர்களை பற்றி தெரியும். அதில் பலருடன் சேர்ந்து நான் வேலை செய்துள்ளேன். எபிசோடுகளை பார்த்தபோது யார் உண்மையாக உள்ளார்கள், யார் பொய்யாக உள்ளனர் என்பது எனக்கு தெரிந்துவிட்டது.

மதுமிதா

மதுமிதா

எனக்கு ரகசிய அறைக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று கணித்தேன். அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று நினைத்து தான் அங்கு சென்றேன். ஆனால் மதுமிதா விவகாரத்தால் அனைத்தும் மாறிவிட்டது. மதுமிதா வெளியேற்றப்பட்டதற்கு மற்றவர்கள் கொடுத்த ரியாக்ஷனை பார்த்து இனியும் இங்கு இருக்க வேண்டுமா என்று தோன்றியது. அதனால் தான் ரகசிய அறைக்கு செல்ல மறுத்தேன்.

சேரன்

சேரன்

வெளியே வந்த பிறகு மதுமிதாவை சந்தித்தேன். அவரின் எவிக்ஷனால் வேதனை அடைந்தேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களின் உண்மையான முகம் தெரியும் என்கிறார்கள், ஆனால் மது வெளியேற்றப்பட்ட நாள் தான் நான் சக போட்டியாளர்களின் உண்மையான முகங்களை பார்த்தேன். அந்த வீட்டில் இருப்பவர்களில் சேரன் சாருக்கு தான் மனிதநேயம் உள்ளது. நான் பிக் பாஸ் வீட்டில் பொய் சொல்லவில்லை, புறம் பேசவில்லை, யாரின் முதுகிலும் குத்தவில்லை. மேலும் பிக் பாஸ் என்னிடம் எதிர்பார்த்ததையும் நான் பேசவில்லை.

ஸ்க்ரிப்ட்

ஸ்க்ரிப்ட்

நான் அரசியல், பெண்கள் முன்னேற்றம், பெண்ணியம், காவிரி விவகாரம் பற்றி நிறைய பேசினேன். அதை எல்லாம் ஏன் காட்டவில்லை?. நான் மதுவுக்கு ஆதரவாக இருந்ததை ஏன் காட்டவில்லை?. நான் பிக் பாஸ் வீட்டில் அமைதியாக இருந்திருந்தால் தான் அது பெரிய அதிசயம். ஹவுஸ்மேட்ஸ் பொம்மை போன்றவர்கள். அவர்களை இயக்குவது பிக் பாஸ் தான். அனைத்துமே ஸ்க்ரிப்ட் படி தான் நடக்கிறது என்று கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X