தாராளமாக தடவலாம், ஆனால் 2 கன்டிஷன்: நெட்டிசனுக்கு கஸ்தூரி நெத்தியடி பதில்
Recommended Video

சென்னை: தடவுவது பற்றி நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி.
சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியை விமர்சிக்க பல்லாண்டு வாழ்க படத்தில் எம்.ஜி.ஆர். நடிகை லதாவை தடவியதை மேற்கோள் காட்டினார் நடிகை கஸ்தூரி.
அதற்கு லதா உள்பட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து கஸ்தூரியும் மன்னிப்பு கேட்டுவிட்டார்.
கஸ்தூரி
கஸ்தூரி எம்.ஜி.ஆரை. பற்றி போட்ட ட்வீட்டை பார்த்த நெட்டிசன் ஒருவர் நான் உங்களை தடவலாமா என்று கேட்டார். அதை பார்த்த கஸ்தூரி, அது படக் காட்சியாக இருந்து நாம் இருவரும் நடித்தால், நீங்கள் 7 வயதுள்ளவராக இருந்தால் கண்டிப்பாக தடவலாம் என்று பதில் அளித்தார்.
நீக்கம்
கஸ்தூரியின் நெத்தியடி பதிலை பார்த்த அந்த நெட்டிசன் தன் ட்வீட்டை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். நல்லவிதமாக கமெண்ட் போட்டபோதெல்லாம் பதில் அளிக்காமல் முதல் முறையாக தப்பா போட்ட கமெண்ட்டுக்கு பதில் அளிக்கிறீர்களே என்று அவர் தெரிவித்துள்ளார்.
நெத்தியடி
கேவலமாக கேள்வி கேட்ட நெட்டிசனுக்கு நெத்தியடி பதில் அளித்த கஸ்தூரியை பலரும் பாராட்டியுள்ளனர்.
அமாவாசை
பாராட்டுபவர்கள் பாராட்டினாலும் இப்படியும் சிலர் கமெண்ட் போட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











