For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  எல்லாத்தையும் பப்ளிக்கா பண்றது.. அப்புறம் பிரைவஸி இல்லன்னு புலம்புறது.. வனிதாவை சாடினாரா கஸ்தூரி?

  |

  சென்னை: எல்லாத்தையும் பப்ளிக்கா பண்றது, அப்புறம் பிரைவஸி இல்லன்னு புலம்புறது என கஸ்தூரி போட்டுள்ள டிவீட் மறைமுகமாக வனிதாவை சாடுகிறாரா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறது.

  V-CONNECT | ACTRESS KASTHURI CHAT PART-2 |இன்சூரன்ஸ் குடுங்க சம்பளத்த கம்மி பன்றோம் |FILMIBEAT TAMIL

  கடந்த சனிக்கிழமை பீட்டர் பால் என்பவரை நடிகை வனிதா மூன்றாவது முறையாக திருமணம் செய்துக் கொண்டார்.

  உதட்டு முத்தங்கள், ஷாம்பைன் பொங்க நடந்த திருமண சந்தோஷம் அடங்குவதற்குள்ளே வனிதாவின் வாழ்க்கையில் புதிய சிக்கல் வெடித்துள்ளது.

  சுஷாந்த் சிங் தற்கொலை.. ரம்யா கிருஷ்ணன் காரில் சரக்கு.. மாயன் காலண்டர்.. கஸ்தூரி பளிச் பேட்டி!

  வெடி போட்ட முதல் மனைவி

  வெடி போட்ட முதல் மனைவி

  ஏற்கனவே திருமணமான விஷுவல் எடிட்டர் பீட்டர் பால், முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்யாமல், இரண்டாவதாக நடிகை வனிதா விஜயகுமாரை திருமணம் செய்துள்ளார் என்ற புகாருடன் வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமண வாழ்க்கையில் வெடி போட்டு இருக்கிறார் பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன்.

  லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனுடன் சண்டை

  லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனுடன் சண்டை

  வனிதா விஜயகுமாரை டிவிட்டரில் விளாசித் தள்ளியிருந்த இயக்குநரும் நடிகையுமான ‘சொல்வதெல்லாம் உண்மை' புகழ் லக்‌ஷ்மி கிருஷ்ணனுக்கும் வனிதா விஜயகுமாருக்கும் நேற்று டிவிட்டரில் சண்டை களைகட்டியது. உங்க வேலையை நீங்க பாருங்க, மத்தவங்க லைஃப்ல தேவை இல்லாம தலையிட வேண்டாம் என விளாசி இருந்தார்.

  எல்லாத்தையும் பப்ளிக்கா பண்றது

  எல்லாத்தையும் பப்ளிக்கா பண்றது

  உங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கை வரலாற்றையும் சமூக வலைதளத்தில் பதிவிடுவது. குடும்பம், குழந்தைங்கன்னு எல்லாரையும் யூடியூபில் அறிமுகப்படுத்துவது அப்புறம் என் லைஃப் என் இஷ்டம் எனக்கு பிரைவசி கொடுங்க என பிரச்சனை வந்த பிறகு புலம்ப வேண்டியது இதெல்லாம் எவ்வளவு வேடிக்கையா இருக்கு தெரியுமா?

  சட்டவிரோதம்

  சட்டவிரோதம்

  ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் யாரும் தலையிடமாட்டார்கள், அது சட்டவிரோதமாக இல்லாத வரைக்கும் மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையை கெடுக்காத வரைக்கும் என நடிகை வனிதாவின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடாமல் கஸ்தூரி பதிவிட்டுள்ளது மேலும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. கமெண்ட்டில் பல நெட்டிசன்களும், வனிதாவை தானே சொல்றீங்க என கேட்டுள்ளனர்.

  காட்டிக்குடுக்குறீங்களா

  காட்டிக்குடுக்குறீங்களா

  "என்ன கஸ்தூரி மேடம் பிக்பாஸ்ல வனிதா அக்கா கிட்ட வாங்கினது பத்தல போலயே.. இப்டி பழி வாங்குறேன்ற பேருல பண்றது தான் cheapest thing in the world.. didn't expected from you" என ஒரு நெட்டிசன் போட்ட கமெண்ட்டுக்கு, "நான் பொதுவா 'hypocrisy' பற்றி பேசியதும் உடனே இன்னாரைதான் சொன்னேன் என்று நீங்களே ஒரு முடிவுக்கு வந்தீங்க பாருங்க, இது அடுக்குமா? முட்டு குடுக்குறீங்களா காட்டிக்குடுக்குறீங்களா?" என யாரை பற்றி கஸ்தூரி பேசினார் என்பது தெளிவாக தெரியும்படி விவாதம் களைகட்டியது.

  English summary
  Kasturi tweeted, “Putting out your entire life on social media , peddling your family and kids on youtube and then asking for privacy when things backfire.” Will lead she indirectly kidding Vanitha Vijayakumar.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X