ஸ்ரீதேவிக்கு பாட்டு, பட கிளிப்பிங் போட்ட செய்தி சேனல்கள் சன்னிக்கு என்ன செய்வார்கள்?: கஸ்தூரி
Recommended Video

சென்னை: சன்னி லியோன் ஒரு நாள் இறக்கும்போது செய்தி சேனல்கள் எதை காட்டுவார்கள் என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
துபாய் சென்ற இடத்தில் நடிகை ஸ்ரீதேவி மதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிர் இழந்தார். அவரின் மறைவால் அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி ஒரு ட்வீட் போட்டுள்ளார்.
சன்னி லியோன்
மறைந்த ஸ்ரீதேவியின் பாடல்கள், கிளிப்பிங்கை அனைத்து செய்தி சேனல்களும் காட்டுகின்றன. ஒரு நாள் சன்னி லியோன் இறக்கும்போது என்ன நடக்கும் என்று வியக்கிறேன் என்று ட்வீட்டியுள்ளார் கஸ்தூரி.
ட்வீட்
கஸ்தூரியின் ட்வீட்டை பார்த்த ஒருவர் இதே ஒரு ஆண் ட்வீட்டியிருந்தால் நீங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்வீர்களா? பெண்கள் உரிமை குழுக்கள் ஆளாளுக்கு கிளம்பிவிடுவார்கள் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
புரியவில்லையா?
ஆளாளுக்கு கேள்வி கேட்பதை பார்த்த கஸ்தூரி தான் நக்கலாக ட்வீட் போட்டதாக தெரிவித்துள்ளார். இது நக்கல், நையாண்டிக்கான நேரமா என்றும் பலர் கேட்டுள்ளனர்.
தோசை
ஆசை
தோசை
அப்பளம்
வடை
😂😂 என்று ஒருவர் ட்வீட்ட அதற்கு கண்ணடிக்கும் ஸ்மைலி மூலம் பதில் அளித்துள்ளார் கஸ்தூரி.


Click it and Unblock the Notifications