சாமி 2... விக்ரமை கலாய்த்த கஸ்தூரி.. பதிலடி கொடுத்த ரசிகருக்கு ‘மூ*போ’ என அர்ச்சனை!
விக்ரம் பட டிரெய்லரைக் கலாய்த்து கஸ்தூரி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: சாமி டிரெய்லரை கலாய்த்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை கஸ்தூரி.
கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்னர் வெளியாகி ஹிட்டடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் நாயகனாக நடித்த விக்ரமே இதிலும் நாயகனாக நடிக்க, இயக்குநர் ஹரியே இயக்கியிருக்கிறார்.
அதிகம் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியானது. வழக்கம் போல் ஹரியின் படங்களுக்குரிய அனைத்து அம்சங்களும் அதில் இடம்பெற்றுள்ளது. இந்த டிரெய்லர் குறித்து கலவையான விமர்சனங்கள் வந்தவன்ணம் உள்ளன.
இந்நிலையில், நடிகை கஸ்தூரியும் சாமி 2 டிரெய்லர் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.
கஸ்தூரியின் டிவிட்:
அதில் அவர், "முந்தா நாளு வந்த டீஸர் ல கலாய்ச்சிருந்த .அத்தனை டெம்பிளேட் சீன்ஸையும் ஒண்ணு சேர்த்து ஒரு ட்ரைலெர். ஸ்ஸ்ஸப்பா!" என கலாய்த்துள்ளார். முந்தாநாள் வந்த டீசர் என இதில் கஸ்தூரி கூறியிருப்பது தமிழ்ப்படம் 2.0-வின் டீசரைத் தான். அதில், பல தமிழ்ப்படங்களின் காட்சிகளைக் கலாய்த்திருந்தனர்.
தமிழ்ப்படம் 2.0 :
அந்தப் படத்தில் கஸ்தூரியும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். அது தொடர்பான காட்சிகளும் அந்த டீசரில் இடம் பெற்றிருந்தது.

பதிலடி:
இந்நிலையில் சாமி2வை கஸ்தூரி கலாய்த்திருப்பதால், விக்ரம் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளனர். கஸ்தூரியின் பதிவிற்கு பதிலடி தரும் விதமாக அவர்களும் தமிழ்ப்படம் 2.0 டீசரில் இடம் பெற்றிருந்த அவரது நடனத்தை சுட்டிக் காட்டியுள்ளனர்.

எனக்கு நடிக்க வராது சாமி:
ஆனால், அதற்கும் பதிலடி கொடுத்துள்ள கஸ்தூரி, சம்பந்தப்பட்ட ரசிகரைத் திட்டாமல் விக்ரமை வம்பிற்கு இழுத்துள்ளது மேலும் அவரது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது. இது தொடர்பான பதிவில் அவர், "சொந்த பொண்ணை விட சின்ன வயசு பொண்ணோட டூயட் பாடுறதுதான் வயசுக்கேத்த நடிப்பா ? அந்த அளவு எனக்கு நடிக்க வராது சாமி. ஏன்னா நான் பேய்க்கு பொறக்கல, பூதம் இல்ல. போடா மூடிக்கிட்டு" என காரசாரமாக தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











