கலைஞர் உடல்நிலையை மனதில் வைத்து பிக்பாஸை கலாய்த்த கஸ்தூரி

நடிகை கஸ்தூரி பிக்பாஸ் நிகழ்ச்சியை சூசகமாக விமர்சித்துள்ளார்.

சென்னை: நடிகை கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியை பெயர்க் குறிப்பிடாமல் விமர்சித்துள்ளார்.

அவ்வப்போது காரசாரமான கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருபவர் கஸ்தூரி. ஸ்ரீரெட்டி தொடர்பாகாக் கூட சமீபத்தில் பேசியிருந்தார்.

Kasthuris tweets about Bigg Boss!

இந்த நிலையில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியை பெயர் குறிப்பிடாமல் சூசகமாக கிண்டலடித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிக்கப்பட்டு டாஸ்க்குகள் கொடுக்கப்படுகின்றன. சமீபத்தில் நீலம் மற்றும் மஞ்சள் என இரண்டு அணிகள் பிரிக்கப்பட்டன.

டாஸ்க்கில் எந்த அணி வெற்றிபெறுகிறதோ அந்த அணி சொல்வதை தோற்றுப்போன அணியினர் கேட்டு நடக்க வேண்டுமென்பது விதி. அந்த வகையில் வெற்றிபெற்ற அணியினர் பிக்பாஸ் வீட்டின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக்கொள்வர்.

அந்த ஆக்கிரமிப்பு பகுதிக்குள் தோல்வியுற்ற அணியினர் செல்ல வேண்டுமென்றால், வெற்றி பெற்ற அணியினர் சொல்லும் டாஸ்க்கை முடிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டது.

நானே தான் டீ போட்டுக் குடிப்பேன் என்று மும்தாஜ் அடம்பிடிக்க சமையல் அறையை தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த நீல நிற அணியினர் அவரின் கோரிக்கையை ஏற்க மறுத்தனர்.

இந்த நிகழ்வைக் கிண்டலடித்துள்ள கஸ்தூரி, இங்க என்ன நடக்குதுன்னே தெரியாம அங்க ஒரு குரூப், டீக்கும் பாத்ரூமுக்கும் அடிச்சிகிட்டு இருப்பாங்க. அதுவும் ஒரு எபிசோடு ஆகும் என ட்வீட் செய்துள்ளார்.


கடந்த சில நாட்களாக திமுக., தலைவர் மு.கருணாநிதி உடல்நிலையால் தமிழகமே பதட்டம் அடைந்துள்ளதை மனதில் வைத்து பிக் பாஸை கிண்டலடித்துள்ளார் கஸ்தூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X