அவங்களோட எனக்கு நட்பா..? நான் பார்த்து வளர்ந்த பொண்ணு நடிகை வனிதா.. கஸ்தூரி சொல்றதை கேளுங்க!

By

சென்னை: வனிதா, நான் பார்த்து வளர்ந்த பெண் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Surya Devi ன் ஆவேசம், பொய்யான கஞ்சா புகார் வாபஸ் வாங்க வேண்டும்

முறையாக விவாகரத்து பெறாத பீட்டர்பாலை, மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார் நடிகை வனிதா.

எப்போதும் பரபரப்பாக இருக்கும் வனிதா, இந்த திருமணம் மூலம் மேலும் பரபரப்பானார்.

லட்சுமி ராமகிருஷ்ணன்

லட்சுமி ராமகிருஷ்ணன்

பீட்டர் பாலின் முதல் மனைவி கொடுத்த புகாரை அடுத்து இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் விஸ்வரூபமெடுத்தது. வனிதாவின் திருமணம் குறித்து நடிகை கஸ்தூரியும், நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணனும் கருத்து தெரிவித்திருந்தனர். இவர்களுக்கும் வனிதாவுக்கும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் கருத்து மோதல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஒரு புருஷன் இருந்தா?

ஒரு புருஷன் இருந்தா?

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மீடியா ஒன்று நடிகை வனிதாவையும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனையும் நேரலையில் பேச வைத்தது. இதில் பேசிய நடிகை வனிதா, லட்சுமி ராமகிருஷ்ணனை அநாகரிகமாக பேசினார். ஒரு கட்டத்தில், வாடி போடி என்று அழைக்கத் தொடங்கிய வனிதா, நீ என்ன பத்தினியா? ஒரு புருஷன் இருந்தா, நீ ஒழுங்கா?' என்று ஆவேசமானார்.

தரக்குறைவாக

தரக்குறைவாக

இதுபற்றி நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், 'நூறு கணவர் வேண்டுமானாலும் இருக்கட்டும். கவலையில்லை. ஆனால், வெறொரு பெண்ணின் கணவராக இருக்கக் கூடாது' என்று கூறியிருந்தார். இவருக்கு ஆதரவாக நடிகை கஸ்தூரியும் பேசியிருந்தார். இதனால் நடிகை வனிதா, கஸ்தூரியையும் விளாசினார். முட்டாள், காமெடி பீஸ் என தரக்குறைவாக விளாசிய வனிதா, அவரை பிளாக் செய்துவிட்டதாக அறிவித்தார்.

உங்கள் கணவர் பற்றி

உங்கள் கணவர் பற்றி

இதற்கு, 'என்ன பயந்துட்டியா குமாரு' என்று கிண்டலடித்த நடிகை கஸ்தூரி, உங்களை கேள்விகேட்டால், அவர்களை அவதூறாகப் பேசிவிட்டு ஓடிவிடுவீர்கள். சிங்கப் பெண்ணே, சிரிப்பாக வருகிறது. இந்த நிமிடம் வரை, உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை பற்றியோ, உங்கள் கணவர் பற்றியோ எந்த கேள்வியையும் கேட்கவில்லை. உங்கள் மலிவான நடவடிக்கைகளை மட்டுமே கேள்வி கேட்கிறேன். என்னை பிளாக் பண்ணியது நல்லதுதான் என்று கூறியிருந்தார்.

விலகினார் வனிதா

விலகினார் வனிதா

இந்தப் பிரச்னை மேலும் பெரிதாகி கொண்டே இருந்த நிலையில், ட்விட்டரில் இருந்து திடீரென விலகினார் வனிதா. பிறகு மீண்டும் வந்தார். இப்போது பர்த் டே பார்ட்டி கொண்டாடிய நடிகை வனிதா அது தொடர்பான வீடியோவை விட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர் ஒருவர் ட்விட்டரில், 'ஒரு காலத்துக்கு முன் நீங்களும் நடிகை வனிதாவும் நண்பர்கள்தானே என்று கேட்டிருந்தார். இதை மறுத்துள்ளார் நடிகை கஸ்தூரி.

காயப்படுத்தி வருகிறார்

காயப்படுத்தி வருகிறார்

' நட்பு இல்லை. நான் பார்த்து வளர்ந்த பெண். இப்பவும் எனக்கு எந்த பகையோ காழ்புணர்ச்சியோ எதுவுமே இல்லை. பொதுவெளியில் வனிதா அவர்கள் மிகவும் கொச்சையாக பேசி பலரையும் காயப்படுத்தி வருகிறார். அந்த போக்கை மாற்றி கொண்டால் இப்போதும் உதவ தயாராக உள்ளேன்' என்று கூறியுள்ளார் நடிகை கஸ்தூரி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X