கோவை சம்பவம்: ராத்திரி பேசப்போற இடமா அது? அடிப்படை ஒழுக்கம் வேண்டாமா? கஸ்தூரி கேள்வி?

சென்னை: ஞாயிற்றுக்கிழமை மதுரையை கல்லூரி மாணவி ஒருவர் கோவையில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி படித்து வருகிறார். இந்த மாணவி ஆண் நண்பருடன் காரில் வெளியே சென்றுள்ளார். இவர்கள் கோவை விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிருத்தாவன் நகர் பகுதியில் காரை நிறுத்திவிட்டு காருக்கு இரவில் 11 மணியளவில் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இப்போது அந்த வழியாக வந்த 3 பேர், ஆண் நண்பரை தாக்கிவிட்டு, இந்த மாணவியை தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குணா, சதீஸ், கார்த்திக் என்ற மூன்று போரை காலில் சுட்டுப்பிடித்து கைது செய்தனர்.இதுதொடர்பான விசாரணை நடந்து வரும் நிலையில் நடிகை கஸ்தூரி The Debate யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம், திருச்சியில் பெண் மர்ம மரணம் அடைந்தது போன்ற விஷயங்களால், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த விஷயத்தில் மட்டும் போலீசார் எதை கண்டுபிடிக்க போகிறார்கள் என மக்கள் நினைத்திருந்த வேலையில் குற்றம் நடந்த 24 மணி நேரத்திற்குள், போலீசார் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை சுட்டு பிடித்தது இருக்கிறார்கள் இது மிகவும் பாராட்டுக்கூடிய விஷயமாகவே நான் பார்க்கிறேன்.

Coimbatore college girl Kasthuri
Photo Credit:

நடிகை கஸ்தூரி: இரவு 11 மணிக்கு ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு இடத்தில் ஒரு ஆணும் பெண்ணும் பேசுவதற்கான காரணம் என்ன? பேசுவதற்கு வேறு இடமே கிடைக்கவில்லையா? இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணை மட்டும் நான் குற்றம் சொல்லவில்லை உடன் இருந்த ஆணும் தான் பாதிக்கப்பட்டு இருக்கிறான். பாதுகாப்பு இல்லாத அச்சுறுத்தல் மிகுந்த இடத்தில் அவர்கள் தனியாக சந்திக்க என்ன காரணம். இதுபோன்ற இடத்தில் தான் சமூகவிரோதிகள், மது போன்ற போதை பொருள் பழக்கம் உள்ளவர்கள் இருப்பார்கள். இதுபோன்ற இடத்தில் கார் வருகிறது என்றால், நிச்சயமாக அவர்கள் அந்த காரை நோட்டமிட்டுத்தான் இப்படி செய்து இருப்பார்கள். இந்த விஷயத்தில் நான் பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று சொல்லவில்லை. இதுபோன்ற பாதுகாப்பு இல்லாத இடத்திற்குத்தான் போகவேண்டாம் என்று சொல்கிறேன் என நடிகை கஸ்தூரி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X