For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பலான விஷயங்களுக்காக பாங்காக் வரை போகும் நம்ம ஆட்களை.. மதுக்கடை மேட்டரில் நடிகை கஸ்தூரி பொளேர்!

  By
  |

  சென்னை: தமிழனுக்குத் தண்ணி வேண்டும் என்கிற அரசின் பொறுப்புணர்ச்சியை எப்படி பாராட்ட என்று புரியவில்லை என்று நடிகை கஸ்தூரி கிண்டலடித்துள்ளார்.

  Recommended Video

  கொரோனாவை ஒரு கை பார்ப்போம் | ACTRESS KASTHURI | FILMIBEAT TAMIL

  மதுக்கடைகளை திறப்பது தொடர்பாக நடிகை கஸ்தூரி பேஸ்புக்கில் கூறியிருப்பதாவது: தனியொருவனுக்குத் தண்ணியில்லையினில் ஜகத்தினை அழித்திடுவோம்ங்கற அசுர வேகத்தோட உச்ச நீதிமன்றத்துல தமிழகம் சார்பா ரெண்டு கேஸ் பைலை பண்ணியிருக்காங்க .

  மே 17 வரைக்கும் கூட தாக்கு பிடிக்க முடியாதாம். தண்ணியில்லாம தமிழகம் இருந்திறக்கூடாதாம் !

  இந்துக் கடவுள்களை அவமதித்தாரா விஜய்சேதுபதி.. குவியும் ஆதரவு.. டிரெண்டாகும் #wesupportvijaysethupathiஇந்துக் கடவுள்களை அவமதித்தாரா விஜய்சேதுபதி.. குவியும் ஆதரவு.. டிரெண்டாகும் #wesupportvijaysethupathi

  சாராய மேட்டர்

  சாராய மேட்டர்

  இது காவிரி பிரச்னையா, முல்லை பெரியார் பிரச்னையா , தமிழக மாவட்டங்களின் குடிநீர் பிரச்னைக்கா என்று யாரும் தப்பா நினைச்சிறாதீங்க. அதையெல்லாம் விட மிக முக்கியமான, மக்களுக்கு அத்தியாவசியமான, சமூகத்துக்கு தேவையான சாராய மேட்டர் இது ! தங்கு தடையில்லாத தண்ணி சப்ளை நடத்தும் 'உரிமையை' கேட்டு தமிழக அரசு ஒரு மனு , மேலதிகமாக டாஸ்மாக் இன்னொரு மனு, சுப்ரீம் கோட்டுல ! அட அடா !

  கொள்கை முடிவாம்

  கொள்கை முடிவாம்

  தமிழனுக்கு தண்ணி வேணும்கற இந்த பொறுப்புணர்ச்சிய எப்படி பாராட்டுறதுன்னே புரியலையே! இது கொள்கை முடிவாம். கோர்ட் இதில் தலையிடக் கூடாதாம். கொள்கைன்னா 'வாய்மையே வெல்லும்' 'தர்மம் தலைகாக்கும்' 'சம உரிமை சமூக நீதி' இதெல்லாம் கொள்கை. 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' என்றால், அது கொள்கை. அதை சொன்ன அண்ணா இன்று இருந்தால், 'அண்ணா திமுக ' அரசின் கொள்கையை பார்த்து என்ன சொல்லுவார்?

  என்ன லாஜிக்?

  என்ன லாஜிக்?

  இங்கே யாரும் பூரண மதுவிலக்கை கூட கோரவில்லை. கொரோனா தொற்று அதிகரித்து அச்சுறுத்தும் வேளையில், டீ கடை கூட திறக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டு மதுக்கடையை திறப்பது என்ன லாஜிக் என்றுதான் கேட்கிறோம். பள்ளிகள், கடைகள், சினிமா, கோவில் தேவாலயங்கள், என், பார்க், கடற்கரையை கூட மூடிவிட்டார்கள்.

  உத்திரவாதம்

  உத்திரவாதம்

  கோவிலிலும் உடற்பயிற்சிக் கூடத்திலும் எதிர்பார்க்கமுடியாத சுயக்கட்டுப்பாட்டை மதுக்கடையில் உத்திரவாதம் கொடுக்கிறது நமது அரசு. கேரளாவில் மது என்பதை தவறாகவே பார்ப்பதில்லை. குடிப்பதில் சாதனையாளர்கள் என்று பெருமை பெற்றவர்கள் மலையாளிகள். பாண்டிச்சேரியும் மது விற்பனைக்கு பெயர் போனது. அப்பேற்பட்ட கேரளாவிலும் புதுச்சேரியுமே மதுக்கடைகளை ஊரடங்கு நேரத்தில் திறக்க முற்படவில்லை.

  அவமானமில்லையா?

  அவமானமில்லையா?

  அப்புறம் எதற்கு அண்டை மாநிலம் என்று சாக்கு சொல்லுகிறீர்கள்? ஊரடங்கு நேரத்தில் அடுத்த தெருவுக்கு கூட சென்றால் கூட ஆயிரம் கேள்வி கேட்கிறார்கள், அண்டை மாநிலத்துக்கு அவ்வளவு ஈசியாக ஆளை விட்ருவீங்களா? இப்பிடி சொல்வது நமது காவல்துறைக்கு அவமானமில்லையா?

  சூதாட்ட விடுதிகள்

  சூதாட்ட விடுதிகள்

  அண்டை மாநிலத்துக்கு காசை கொடுக்காதே, பக்கத்துக்கு ஊருல போயி குடிக்கற அந்தப் பணத்தை எனக்கே குடு, நானே ஊத்தி கொடுக்கறேன் என்று சொல்லும் அரசு, அடுத்தது இதுபோன்ற வருமான இழப்புக்களை தடுக்க என்னவெல்லாம் செய்யலாம்? எப்படியெல்லாம் கொள்கை முடிவு எடுக்கலாம்? பக்கத்துக்கு மாநிலத்தில் லாட்டரி, சூதாட்ட விடுதிகள் உள்ளன. அங்கு ஏன் நம்மாட்கள் போகவேண்டும், அதையும் இங்கே திறக்கலாம்.

  சூதாட்ட விடுதி

  சூதாட்ட விடுதி

  உள்ளூரிலேயே எல்லாரும் லாட்டரியடிக்கலாம். கோவா நேபாள் ஸ்ரீலங்கா சிங்கப்பூர் போன்ற நாடுகளுகளில் கேசினோ உள்ளது. பணக்காரர்கள் அங்கே போய் விடுகிறார்கள். இங்கே மலிவு விலை சூதாட்ட விடுதிகளை தொடங்கி நம்ம மக்களை அடகு வைக்கலாம். பாகிஸ்தான்காரன் கள்ளநோட்டு அடிக்கறான். நாட்டுக்கு ரொம்ப நஷ்டம். கள்ளநோட்டை நாமே அடிச்சுட்டா நம்ம ஊரு அச்சு தொழிலும் கூடும், அண்டை நாட்டுக்காரனுக்கும் ஆப்பு வைச்சுடலாம்.

  அங்கீகாரம்

  அங்கீகாரம்

  கள்ள மார்க்கெட்டில், கஞ்சா ஹெரோயின் போதை மருந்து விற்பனை அமோகமாக இருக்கிறது. கள்ள மார்க்கெட்டை முறைப்படுத்தி அங்கீகாரம் கொடுத்துவிட்டால், போதை பொருள் விற்பனை துறையில் அரசுக்கு நல்ல வரி வரும், மக்களுக்கும் தரமான போதை கிடைக்கும். அப்புறம்.. பலான விஷயங்களுக்காக பாங்காக் வரை போகும் நம்ம ஆளுங்க பணத்தை அங்கே செலவு பண்ணிடறாங்க. அதனாலே...
  இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.

  English summary
  kasthuri shankar slams tamilnadu govt for opening tasmac
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X