ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்குன்னு இருக்கு: கஸ்தூரி
சென்னை: பிக் பாஸ் 3 எல்லாம் குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சி இல்லை என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் 3 ப்ரொமோ வீடியோக்கள் இன்று வெளியாகின. ஒரு வீடியோவில் மீரா மிதுன், மற்றொரு வீடியோவில் தர்ஷன், மூன்றாவது வீடியோவில் வனிதா விஜயகுமார் ஆகியோர் அழுதனர்.
இந்நிலையில் நடிகை கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து அதன் பெயரை கூறாமல் தெரிவித்துள்ள கருத்து நெட்டிசன்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.
கஸ்தூரி
இன்று மீரா மிதுன், தர்ஷன், வனிதா ஆகியோர் அழுத ப்ரொமோ வீடியோக்களை கஸ்தூரியும் பார்த்துள்ளார். அதனால் தான், 'போதும்பா விட்ருங்கப்பா... இன்னும் எத்தினி நாளுக்கு சென்டிமென்டை பிளியபோறீங்க... இப்போவே யாரு எவ்வளோ சோக கதை சொன்னாலும் அழுவாச்சி வரலை... இதுக்கு மேலயும் சோகத்தை பிழியணும்னு அந்த ஸ்ரீலங்கா பொண்ணு யுத்தத்தை பத்தி எதையாவது சொல்லிறப்போவுதோன்னு திக்கு திக்குனு இருக்கு...' என்று தெரிவித்துள்ளார்.
பிளாஷ்பேக்
இதே சேனல் ல "கதையல்ல.. னு" சொல்லி ஒரு நிகழ்ச்சி.... வந்தவங்களை அமுக்கி பிடிச்சு கட்டாயமா அழவைப்பாங்க... அதுல ஆரமிச்சது... எல்லா ப்ரோக்ராம்லயும் அழுவாச்சி பிளாஷ்பேக் ! என்று ட்வீட் செய்துள்ளார் கஸ்தூரி. அவர் பெயரை குறிப்பிடாவிட்டாலும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை தான் விமர்சிக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
கமல்
பிக் பாஸ் நிகழ்ச்சி குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கக் கூடியது. முக்கியமாக குழந்தைகளுக்கு மிகவும் பிடித்துள்ளது என்று கடந்த 23ம் தேதி துவக்க விழாவில் பெருமையாக தெரிவித்தார் கமல் ஹாஸன். இந்நிலையில் குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சியா இது என்று கேள்வி எழுப்பியுள்ளார் கஸ்தூரி.
நெட்டிசன்கள்
கஸ்தூரியின் ட்வீட்டுகளை பார்த்த நெட்டிசன்கள் அவர் சொல்வது உண்மையே என்கிறார்கள். லாஸ்லியாவை இலங்கை போரை பற்றி சொல்ல வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் நெட்டிசன்கள். மேலும் பிக் பாஸ் குழந்தைகள் பார்க்கும் நிகழ்ச்சி இல்லை என்று மேலும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











