கிரண் பேடி பெண்ணில்லை: நாஞ்சில் சம்பத்துக்கு கஸ்தூரி பதில்

By Siva

Recommended Video

கிரண்பேடி ஆணா?.. பெண்ணா?- கேள்வி கேட்ட நாஞ்சில் சம்பத்- வீடியோ

சென்னை: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியை கேலி செய்த நாஞ்சில் சம்பத்தை விளாசியுள்ளார் நடிகை கஸ்தூரி.

லோக்சபா தேர்தலை முன்னிட்டு புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நாஞ்சில் சம்பத் துணை நிலை ஆளுநர் கிரண் பேடி ஆணா, பெண்ணா என்றே தெரியவில்லை என்றார். அவரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Kasthuri slams Nanjil Sampath

இது குறித்து நடிகை கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

(குறிப்பு- இது அரசியல் பதிவு அல்ல, பெண்ணிய பதிவு. அதையும் தாண்டி, பண்பான மேடை பேச்சு குறித்த பதிவு.)

கிரண் பேடி ஆணா இல்லை பெண்ணா என்று தெரியவில்லை- நாஞ்சில் சம்பத்தின் நக்கல்.

தெரிஞ்சா மட்டும்? என்ன செய்வாராம் ? வாய் கெட்டவனுக்கு பால் எப்படி இருந்தா என்ன? ஆளுநர் பணிக்கும் பாலினத்திற்கும் என்ன சம்பந்தம் ? இப்படி பேசுறவங்க எந்த இனம்? மனுஷ இனமான்னே எனக்கு புரியலை. இதுக்கு மதிப்பிற்குரிய கனிமொழி என்ன சொல்லுவாங்க? இதுல்லாம் திமுக கட்சி கொள்கைப்படி ஏற்க கூடிய பேச்சுதானா? அது சரி. இப்படியே எல்லார் மேலயும் நடவடிக்கை எடுக்கணும்னா கழகத்துல அப்புறம் யாரு மிஞ்சுவாங்க.

நாஞ்சில் சம்பத் அவர்கள் நடித்த LKG படத்தில், வலிமை மிகுந்த ஒரு தலைவனை கேவலப்படுத்த 'ஆணே இல்லை' என்று எதிரணி பிரச்சாரம் செய்வார்கள். அதை போலவே, அந்த பட வசனத்தை மறக்காமல் இன்னமும் ஒப்பித்து கொண்டிருக்கிறார். அந்த படத்தில், அவர் ஏற்று நடித்த கதாபாத்திரம், தமிழறிஞர், திருக்குறளை ஒப்பிப்பவர், ஆனால், அரசியல் மேடைகளில் பெண்கள் முகம் சுளிக்கும்படி கொச்சையாக பேசும் பேச்சாளர். நிழல் நிஜமாகிவிட்டதா, இல்லை நிஜத்தைத்தான் படமாக எடுத்தார்களா?

ஒரு காலத்தில், வைகோ அவர்களின் வலது கையாக இருந்தவர். தெள்ளு தமிழுக்கு சொந்தக்காரர், திராவிட வரலாற்று அறிஞர். எப்படி இருந்த நான்(ஜில்) இப்படி ஆயிட்டாரு !

"பேடி' பேச்சு என்பது இதுதானோ?

சரி அவர் கேட்ட கேள்விக்கே வருவோம்- ஆணா பெண்ணா? ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினம்தான்.

வாய்க்கு வந்தபடி வம்பு பேசுவது ஆண்மையுமில்லை, கிரண் பேடி ஆணுமில்லை. வாய்சவடாலுக்கு பயந்து வலிமையை தோற்பது பெண்மையென்றால், கிரண் பேடி மட்டுமல்ல, சோனியா, பிரியங்கா, கனிமொழி, நான் உட்பட யாருமே பெண்ணில்லை ! வீரமும் விவேகமும் வலிமையும் வலி தாங்கும் வைராக்கியமும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவில் வைப்போம். கற்பையும் நாணயத்தையும் ஆண்களுக்கு கற்று கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X