வெளியேற்றப்பட்ட சனம்.. இதுக்கு பேரு என்ன தெரியுமா?விஜய் டிவியை மீண்டும் நாசம் செய்த கஸ்தூரி!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கஸ்தூரி விஜய் டிவியை விளாசியுள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக பங்கேற்றவர் நடிகை கஸ்தூரி. ஆனால் அடுத்த இரண்டு வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

வெளியே வந்த பிறகு தான் பேசிய காட்சிகள் எதையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் காட்டவில்லை என குற்றம்சாட்டினார். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.

சம்பள பாக்கி

சம்பள பாக்கி

இதனை தொடர்ந்து விஜய் டிவிக்கும் கஸ்தூரிக்கும் ஏழாம் பொருத்தமாய் உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சயில் தான் பங்கேற்றதற்கான சம்பளத்தை ஒரு வருடமாகியும் இன்னமும் கொடுக்கவில்லை என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து

பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து

இதனை தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஸ்தூரிக்கான சம்பளத்தை கொடுத்து விஜய் டிவி. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருகிறார் கஸ்தூரி.

சுச்சி வருகை

சுச்சி வருகை

அந்த வகையில் சுச்சி உள்ளே செல்வதை கிண்டலடித்த கஸ்தூரி, சுச்சி லீக்ஸ் சம்பவத்தை குறிப்பிட்டு டிவிட்டியிருந்தார் கஸ்தூரி. சுச்சி லீக்ஸ் புகழ் சுசித்ரா போறாங்களாம். ஒரு கேமரா கன்டென்ட்டுக்கே ஊரே அலறிச்சு... இங்கே 100 கேமெரா ! ஹவுஸ்மேட்ஸ் கண்டிப்பா சோஷியல் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணுங்க! என குறிப்பிட்டிருந்தார்.

வருத்தப்படாத வைல்டு கார்டு

வருத்தப்படாத வைல்டு கார்டு

பின்னர் சுச்சி வெளியேறிய போதும் அதுகுறித்து டிவிட்டியிருந்தார் கஸ்தூரி. அதாவது, தானை தலைவி சுசித்ராவுக்கு நன்றி நன்றி நன்றி! இப்படிக்கு கஸ்தூரி, நிறுவனர், வருத்தப்படாத வைல்டு கார்டு சங்கம் என பதிவிட்டிருந்தார்.

கொலை விழுந்திருக்கும்

கொலை விழுந்திருக்கும்

தொடர்ந்து பாலாஜி, சனம் ஷெட்டியை தரக்குறைவாக பேசியது குறித்தும் விளாசியிருந்தார் கஸ்தூரி. பாலாஜி என்ன அரிச்சந்திரனுக்கு பேரனா என்றும் சனம் ஷெட்டியின் இடத்தில் நான் இருந்திருந்தால் கொலையே விழுந்திருக்கும் என்றும் கூறியிருந்தார்.

விஜய் டிவிக்கு விளாசல்

விஜய் டிவிக்கு விளாசல்

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சனம் ஷெட்டி வெளியேறியதை பார்த்து கடுப்பான கஸ்தூரி அதற்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டியுள்ளார். நல்ல போட்டியாளரான சனம் ஷெட்டி வெளியேற்றப்பட்டதற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விஜய் டிவியை விளாசியுள்ளார் கஸ்தூரி.

பேரு என்ன தெரியுமா?

பேரு என்ன தெரியுமா?

இதுதொடர்பாக கஸ்தூரி பதிவிட்டிருப்பதாவது, நியாயமான நேர்மையான முறையில் மக்கள் வாக்குகளை மட்டுமே நம்பி விளையாடப்படும் ஒரு கேம் என்று இன்னும் நம்புபவர்கள் மேடைக்கு வரவும். மிக்சர் பார்ட்டிகளையும் கம்பெனி ஆர்டிஸ்ட்ங்களையும் பாதுகாத்து மத்தவங்களுக்கு கல்தா குடுக்கறதுக்கு பேரு என்ன தெரியுமா? என கூறியுள்ளார்.

பொழப்பு ஓட்டிட்டு இருக்கு

பொழப்பு ஓட்டிட்டு இருக்கு

கஸ்தூரியின் இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கஸ்தூரியின் பதிவை பார்த்த இந்த ரசிகர், இதெல்லாம் முதல் ஸீஸன்லயே பல பேர்க்கு தெரிஞ்சிடுச்சு.. நிறைய பேர் இந்த கோமாளித்தனத்தை தெரிஞ்சும் ரசிக்கறாங்க கஸ்தூரி.. அதான் பொழப்பு ஓடிட்டு இருக்கு விஜய் டிவிக்கு என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X