செருப்பால் அடித்தேன், அதில் ஒருவர் இழுத்துக் கொண்டிருக்கிறார்: கஸ்தூரியின் #MeToo அனுபவம்
சென்னை: தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை செருப்பால் அடித்ததாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டை அடுத்து கோலிவுட்டிலும் மீ டூ இயக்கம் தீவிரம் அடைந்து வருகிறது. என்ன, பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் இத்தனை ஆண்டுகள் என்ன தூங்கிக் கொண்டிருந்தீர்களா என்று கேட்கிறார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர்களோ இது எல்லாம் சுத்தப் பொய் என்று கூறி வருகிறார்கள்.

பாலியல் தொல்லை
படங்களில் நடிக்கும்போது தானும் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கஸ்தூரி முன்பே தெரிவித்திருந்தார். மீ டூ இயக்கம் வேகம் அடைந்துள்ள இந்த நேரத்தில் அந்த நபர்களின் பெயர்களை வெளியிட ஏன் தயங்குகிறீர்கள் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு அவர் பதில் அளித்துள்ளார்.

தயக்கம் இல்லை
தயக்கமில்லை. பரிதாபம். ஏற்கனவே என்கிட்டே செருப்படி வாங்கிட்டு இன்னிக்கு வரை பொது இடத்துல என்னை பாக்கும் போதெல்லாம் எதுவுமே நடக்காத மாதிரி மழுப்பற சிலர். இறந்துவிட்ட ஒருவர், இழுத்துக் கொண்டு ஒருவர். இவங்களை பத்தி இப்போ பேசுறதுக்கு எனக்கே பாவமா இருக்கு என்று தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் பற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கஸ்தூரி.

நெட்டிசன்கள்
இறந்துவிட்ட ஒருவர், இழுத்துக் கொண்டு ஒருவர் என்று கஸ்தூரி ட்வீட்டியதை பார்த்தவர்கள் அது யாராக இருக்கும் என்று கணித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலரோ தைரியமாக அவர்களின் பெயர்களை வெளியிட்டு அவர்களின் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்று கஸ்தூரிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எதிர்பார்ப்பு
தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை கஸ்தூரி வெளியிடுவாரா?. பயப்பட வேண்டாம், நாங்கள் இருக்கிறோம், அவர்களின் பெயர்களை வெளியிடுங்கள் என்கிறார்கள் கஸ்தூரியின் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











