சந்தானத்திற்கு நான் அம்மாவா?.. ஷாக் ஆன கஸ்தூரி.. கண்டிப்பா அதுல Twist irukku

சென்னை: இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்திருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படம் மே 16ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் சந்தானம், பிரபல நாளிதழுக்கு பேட்டி அளித்தார். இதில், பல சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் பகிர்ந்துகொண்டார். மேலும், டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் 90களில் தமிழ் சினிமாவை கலக்கிய நடிகையும் நடித்திருப்பதாக நடிகர் சந்தானம் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் அடுத்த பாகமான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தையும் பிரேம் ஆனந்தே இயக்கியுள்ளார். நடிகர் ஆர்யா தனது தி பீபுல் ஷோ மற்றும் நிஹரிகா எண்டெர்டெயின்மண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. மேலும் இப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பல சுவாரஸ்யமான அனுபவங்களை சந்தானம் பகிர்ந்துள்ளார்.

Kasthuri to play Santhanam s mother in DD Next Level

மதகஜராஜா ஹிட்: டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சந்தானம் மதகஜராஜா குறித்து பகிர்ந்து கொண்டார். இதில், மதகஜராஜா படம் வெளியாவதற்கு முன்பு பயம் இருந்தது. 12 வருடங்களுக்கு முன்பு செய்த காமெடி இப்போது வேலைக்கு ஆகுமா என்று யோசித்தேன். ஆனால், படம் ரிலீஸ் ஆன பின்பு மக்களிடம் நல்ல ரீச் கிடைத்ததை பார்த்து சுந்தர் சி சார் பாராட்டினார். இப்படத்தில் நடிக்கும் போது நீங்க தொட்டதெல்லாம் துலங்க போகுது. நினைக்க முடியாத உயரத்தை தொடுவீர்கள். மதகஜராஜாவிலும் உங்க போர்ஷன் பெரிய ஹிட் ஆகும்னு நினைக்கிறேன் என்று சுந்தர் சி தெரிவித்ததாக சந்தானம் தெரிவித்தார். மேலும், நடிகர் சிம்பு நடிக்கும் படத்தில் காமெடி கதாப்பாத்திரத்தில் மீண்டும் நடிக்க இருப்பதையும் உறுதி செய்தார்.

சிம்பு படத்தில்: ஒரு நாள் போன் செய்து என் படத்தில் நடிக்க உங்களுக்கு விருப்பம் இருக்கிறதா என எஸ்டிஆர் என்னிடம் கேட்டார். நான் உடனே எஸ் சொல்லிவிட்டேன். சிம்பு கேட்டு நோ சொல்ல முடியுமா எனவும் தெரிவித்தார். சினிமாவின் ஆரம்பகாலத்தில் எனக்கு உதவியாக இருந்தவர் சிம்பு. அந்த நன்றியை மறக்காமல் சந்தானம் நடிக்க முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், 90களில் ரஜினி, கமல் படங்களில் நடித்து கலக்கிய பிரபல நடிகை டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக சந்தானம் தெரிவித்துள்ளார்.

Kasthuri to play Santhanam s mother in DD Next Level

சந்தானத்திற்கு அம்மாவா?: டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் கதையை நடிகை கஸ்தூரி மேடத்திடம் கதை சொல்வதற்கு முன்பு இந்த படத்தில் நீங்க சந்தானத்திற்கு அம்மாவாக நடிக்கணும்னு கேட்டதும்; என்னது நான் சந்தானத்திற்கு அம்மாவா? எனக் கூறி ஷாக் ஆனாங்க. நாங்க மேடம் கதையை கேளுங்க உங்களுக்கு பிடிச்சிருந்தா ஓகே சொல்லுங்க என்றோம். அப்புறம் கதையை கேட்ட கஸ்தூரி மேடத்திற்கு பிடித்து போனது. அவங்க நடிக்கிற கதாப்பாத்திரம் மிக முக்கியமானதாகவும் த்ரில்லாவும் இருக்கும் என சந்தானம் தெரிவித்தார். மேலும், நிழல்கள் ரவி இப்படத்தில் சந்தானத்திற்கு அப்பாவாகவும், யாஷிகா ஆனந்த் தங்கையாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X