»   »  இணையத்தில் வைரலாகிறது... நடிகை கஸ்தூரியின் டாப்லெஸ் புகைப்படங்கள்

இணையத்தில் வைரலாகிறது... நடிகை கஸ்தூரியின் டாப்லெஸ் புகைப்படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கஸ்தூரியின் டாப்லெஸ் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் வேகத்தில் பரவி வருகிறது. ஒரு குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு கஸ்தூரி நிற்பது போல இந்தப் புகைப்படங்கள் உள்ளன.

மிஸ் மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமான கஸ்தூரி தொடர்ந்து ஆத்தா உன் கோயிலிலே, செந்தமிழ் பாட்டு, அமைதிப்படை மற்றும் சுயம்வரம் போன்ற படங்களில் நடித்துப் புகழ்பெற்றார்.

Kasthuri topless photos goes Viral

அமெரிக்காவில் மருத்துவராக இருக்கும் ரவிகுமாரை திருமணம் செய்து கொண்ட கஸ்தூரிக்கு ஷோபினி மற்றும் சங்கல்ப் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் ஒரு குழந்தையுடன் கஸ்தூரி டாப்லெஸ் தோற்றத்தில் நிற்பது போன்ற புகைப்படங்கள், இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன.

ஒரு வருடத்திற்கு முன்னால் எ பியூட்டிபுல் பாடி ப்ராஜெக்ட் என்ற திட்டத்திற்காக கஸ்தூரி இந்தத் தோற்றத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

உலகப் புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ஜேட் பியால் என்பவர் கர்ப்பக் காலம் மற்றும் குழந்தை பெற்றபின்னர், பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து புகைப்படங்களாக பதிவு செய்து வருகிறார்.

மேலும் இதனை ஒரு புத்தகமாகவும் அவர் தயார் செய்திருக்கிறார். இந்தப் புத்தகத்தில் உலகம் முழுவதுமிருந்து சுமார் 80 தாய்மார்கள் பங்கெடுத்து இருக்கின்றனர்.

இந்தப் புத்தகத்தின் அடுத்தடுத்த பாகங்களையும் வெளியிடும் ஜேட் பியால் அவற்றை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யவும் முடிவு செய்திருக்கிறார்.

தாய்மை, முதுமை, எடைக் குறைவு, புற்றுநோய், கருச்சிதைவு மற்றும் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் பற்றிய விளக்கங்கள் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறது.

35.47 டாலர்கள் விலையுள்ள இப்புத்தகம் அமேசான் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்தப் புத்தகத்தின் மூலம் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவே கஸ்தூரி தனது டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actress Kasthuri Topless Photos Goes Viral on All Social Networks. The photos taken a year ago as part of A Beautiful Body Project.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil