தல போல வருமா... கஸ்தூரியின் ஒன்றை வரி ட்வீட்...குவியும் லைக்குகள்

சென்னை : பிரபல நடிகையான கஸ்தூரி சமூக பிரச்சனைகள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், டிவி நிகழ்ச்சிகள் என பரபரப்பாக பேசப்படும் அனைத்து விஷயங்கள் குறித்தும் ட்வீட் செய்து வருபவர். இவரது ட்வீட்கள் பலவும் வரவேற்பை பெற்றாலும், பல ட்வீட்கள் விமர்சனங்களை சந்தித்துள்ளன.

அப்படி லேட்டஸ்ட் டாக்காக இருப்பது நேற்று அஜித் வெளியிட்ட அறிக்கை தான். இனி தன்னை யாரும் தல என குறிப்பிட வேண்டாம். அஜித், அஜித்குமார் அல்லது ஏகே என்று தனது இயற்பெயரை வைத்து அழைத்தால் போதும் என கேட்டுக் கொண்டார். ரசிகர்கள், ஊடகங்கள் என அனைவருமே தன்னை பெயர் சொல்லி குறிப்பிடவும் என கோரிக்கை வைத்துள்ளார்.

கொண்டாடும் ரசிகர்கள்

கொண்டாடும் ரசிகர்கள்

அஜித்தின் இந்த அறிக்கை அவரது ரசிகர்களுக்கு ஷாக்காக இருந்தாலும் இதையும் வைத்து, அஜித்தை கொண்டாடி வருகின்றனர். அஜித் ரசிகர்கள் இல்லாத பலரும் அவரின் இந்த செயலை பாராட்டி உள்ளனர். அஜித்தின் இந்த அறிக்கை வெளியானதும் அவரது ரசிகர்கள் தல என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கினர்.

கஸ்தூரி ட்வீட்

கஸ்தூரி ட்வீட்

இந்நிலையில் அஜித்தின் அறிக்கையை பற்றி கஸ்தூரி இன்று ட்வீட் செய்துள்ளார். அதில், ஆனாலும்...தல போல வருமா என குறிப்பிட்டுள்ளார். கஸ்தூரியின் இந்த ஒற்றை ட்வீட்டிற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. அஜித்திற்கு தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

இன்னும் ஏன் கூப்பிடுறீங்க

இன்னும் ஏன் கூப்பிடுறீங்க

இருந்தாலும் அஜித் ரசிகர்கள், அவர் தான் தல என கூப்பிட வேண்டாம் என சொல்லி விட்டாரே. அப்புறமும் ஏன் அப்படியே கூப்பிடுகிறீர்கள் என கேட்டுள்ளனர். ரசிகர்கள் மன்றம், அடைமொழி, பப்ளிசிட்டி எதுவும் இல்லாமல் ஒருவர் உச்ச ஸ்டாராக இருக்கிறார் என்றால் அது அஜித் மட்டும் தான் என ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

இனி ஏகே பொங்கலா

இனி ஏகே பொங்கலா

இன்னும் சிலர், இதுவரை வலிமை பட ரிலீசை கொண்டாட தல பொங்கல் என குறிப்பிட்டு வந்தனர் அவரது ரசிகர்கள். ஆனால் அஜித்தே தற்போது தல என அழைக்க வேண்டாம் என சொல்லி விட்டதால், இனி அவரது ரசிகர்கள் ஏகே பொங்கல் என சொல்லி, டிரெண்டிங் ஆக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கின்றனர். இனி ஒரே தல தான் அது தல தோனி என பலர் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X