சொந்த வாழ்க்கையையே வியாபாரம் பண்றது என்ன பொழப்போ புரியலடா சாமி.. வனிதாவை விளாசிய கஸ்தூரி!

சென்னை: நடிகை வனிதாவின் கதறல் வீடியோவை பார்த்து நடிகை கஸ்தூரி விளாசி தள்ளியுள்ளார்.

Recommended Video

தற்போது உண்மையை சொன்ன Vanitha | Filmibeat Tamil

நடிகை வனிதா தனது மூன்றாவது கணவரான பீட்டர் பாலை பிரிந்ததுதான் தற்போது டாக் ஆஃப் த டவுனாக உள்ளது.

மீண்டும் சரக்கும் கையும்க சுற்றிய பீட்டர் பாலை வனிதா வீட்டை விட்டே அடித்து விரட்டி விட்டார் என தகவல் பரவியது.

பீட்டரை காணவில்லை

பீட்டரை காணவில்லை

இதனை தொடர்ந்து அதற்கு விளக்கம் அளித்து நேற்று வீடியோ வெளியிட்டார் வனிதா. அதில் மீண்டும் குடிக்கு அடிமையான பீட்டர் பால் எங்கேயோ சென்றுவிட்டார். மூன்று நாட்களாக வீட்டிற்கு வரவில்லை. போனும் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது என்று கூறினார்.

நான் குறுக்கே வரவில்லை

நான் குறுக்கே வரவில்லை

மேலும் பீட்டர் பாலின் முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் அவருடனே வாழலாம் தான் குறுக்கிடப் போவதில்லை என்றும் கூறியுள்ளார் வனிதா. வனிதாவின் இந்த வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.

என்ன நினைக்கிறீங்க?

என்ன நினைக்கிறீங்க?

இந்நிலையில் வனிதாவின் வீடியோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், வனிதாவின் நேற்றைய வீடீயோவை பற்றி என்ன நினைக்கிறீர்கள். "என்னடா இவன் காலையிலேயே நம்ம வாயை புடுங்குகிறான்" என தவறாக நினைத்து விடாதீர்கள். என கஸ்தூரியிடம் கேட்டார்.

சொல்வதெல்லாம் பொய்

சொல்வதெல்லாம் பொய்

அதனை பார்த்த கஸ்தூரி, வீடியோ வேறயா? பார்த்துட்டு சொல்றேன்.. என்னுடைய அனுபவத்தில் அது எல்லாமே சொல்வதெல்லாம் பொய் ரகம்தான் என்று கூறியிருந்தார். இந்நிலையில் அந்த வீடியோவை பார்த்து விட்டார் போல கஸ்தூரி அது குறித்து டிவிட்டியுள்ளார்.

என்ன பொழைப்போ?

என்ன பொழைப்போ?

அவர் தெரிவித்திருப்பதாவது, ஓ மை கடவுளே... நான் அந்த கண்ணீர் வீடியோவை பார்த்துவிட்டேன். மென்மையான எடிட்டிங் மற்றும் ஸ்டைலான டைட்டில் கார்டுடன் உள்ளது. சொந்த வாழ்க்கையை வியாபாரம் பண்றது என்ன பொழைப்போ புரியலடா சாமி. முழுக்க முழுக்க பொய்.. தற்புகழ்ச்சி, எல்லாரும் கெட்டவங்க வனிதா மட்டும் பாதிக்கப்பட்டவர். எல்லாம் எதிர்பார்த்ததுதான், ஆனால் எலிசபெத் ஹெலனை ஏன் பிளேம் பண்ணனும்.. நம்ப முடியல என தெரிவித்துள்ளார்.

நிறைய சம்பாதிக்கலாம்

நிறைய சம்பாதிக்கலாம்

மற்றொரு டிவிட்டில், நான்கு விளம்பரங்கள் வேற.. இந்த ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட எடிட் செய்யப்பட்ட சிறப்பாக நடித்த இந்த வீடியோ மூலம் நிறைய பணம் சம்பாதிக்கப்படும். அவர் பீட்டர் பாலின் மருத்துவமனை செலவுகளை திரும்பப் பெறுகிறார் என்று நினைக்கிறேன். அவருக்கு சம்பாதிக்க உரிமை உண்டு. ஆனால் குழந்தைகளை இதில் வெளிப்படுத்தக்கூடாது என கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X