Next Level-க்கு சென்ற கஸ்தூரி, யாஷிகா ஆனந்த்.. சந்தானம், கெளதம் மேனன் போட்ட ட்வீட்டை பாருங்க!

சென்னை: டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை 23ம் தேதி வெளியாகி சந்தானத்தை தொடர் தோல்விகளில் இருந்து மீட்டு வெற்றியை கொடுத்தது. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கிய நிலையில், அதன் அடுத்த பாகத்தையும் அவரே இயக்கப்போவதாகவும் அந்த படத்தை ஆர்யா தயாரிக்கப் போவதாகவும் வெற்றி விழாவில் அறிவிப்புகள் வெளியாகின.

இந்நிலையில், அதற்கான தகுந்த நேரம் மத கஜ ராஜா படத்தின் வெற்றிக்குப் பிறகு சந்தானத்துக்கு கிடைத்துள்ளது. நாளை நெக்ஸ்ட் லெவல் என டிரெண்டாகும் டிடி ரிட்டர்ன்ஸ் பார்ட் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாக காத்திருக்கிறது என சந்தானம் அறிவித்துள்ளார்.

dd next level kasthuri shankar yashika aannand

இந்த படத்தில் ஆர்யா, சந்தானம், கெளதம் மேனன், செல்வராகவன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் என ஏகப்பட்ட பிரபலங்கள் இணைந்துள்ளதாக அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. கெளதம் மேனன் மற்றும் செல்வராகவன் உள்ளிட்ட பிரபலங்களும் நெக்ஸ்ட் லெவல் ஹாஷ்டேக்கில் ட்வீட்களை அடுக்கியுள்ளனர்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்துக்கு பிறகு: பிக் பாஸ் பிரபலமும் நடிகையுமான யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஜாம்பி உள்ளிட்ட பேய் படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் தற்போது சந்தானத்தின் நெக்ஸ்ட் லெவல் படத்தில் அவர் இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் தான் மெயின் ஹீரோயினா அல்லது சந்தானத்துக்கு ஜோடியாக வேறு யாராவது நடிக்க உள்ளனரா உள்ளிட்ட தகவல்கள் விரைவில் தெரிய வரும்.

dd next level kasthuri shankar yashika aannand

கஸ்தூரி ஆஜர்: ஏகப்பட்ட சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவிலும் அரசியல் களத்திலும் டிரெண்டாகி வரும் நடிகை கஸ்தூரியும் சந்தானத்தின் நெக்ஸ்ட் லெவல் டிடி ரிட்டர்ன்ஸ் கேமில் கலந்துக் கொள்ளப் போவது உறுதியாகி உள்ளது. டிடி ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோயினாக நடித்த சுரபி நடிப்பாரா? மாட்டாரா என்கிற கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

dd next level kasthuri shankar yashika aannand

கெளதம் மேனன், செல்வராகவன்: இயக்குநர்களாக இருந்தாலும் தொடர்ந்து பல படங்களில் நடித்து சிறந்த துணை நடிகர்களாக மாறி மிரட்டி வரும் கெளதம் மேனன் மற்றும் செல்வராகவன் இருவரும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கலக்கப் போகின்றனர் என்பது கன்ஃபார்ம் ஆகிவிட்டது. இருவரும் நெக்ஸ்ட் லெவலுக்கு ரெடியாகிவிட்டோம் என ட்வீட் போட்டுள்ளனர்.

dd next level kasthuri shankar yashika aannand

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X