twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகளே இந்த தீட்டு-க்கு என்ன சொல்கிறீர்கள்? மீண்டும் சர்ச்சையில் கஸ்தூரி

    சபரிமலை பற்றி டிவீட் போட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை கஸ்தூரி.

    |

    Recommended Video

    Actress Kasturi: மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை கஸ்தூரி- வீடியோ

    சென்னை: தமிழ் சினிமாவில் உள்ள தீட்டுக்கு சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் என்ன செய்யப் போகிறார்கள் எனக் கேட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை கஸ்தூரி.

    சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருப்பவர் நடிகை கஸ்தூரி. சமூகத்தில் நடக்கும் தன் மனதுக்கு தவறென படும் எந்த விதமான சம்பவங்களையும் அவர் சமூகவலைதளப் பக்கம் மூலம் தட்டிக் கேட்கத் தவறுவதில்லை.

    ஆனால், அத்தகைய பதிவுகளால் அவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதும் வாடிக்கையாகி வருகிறது. அதுபோன்ற சமயங்களில் நெட்டிசன்களின் பதிவுக்கு தானும் பதிலடி கொடுத்து, தன் பக்க நியாயத்தை எடுத்துரைப்பது கஸ்தூரியின் ஸ்டைல்.

    தற்போதும் அது போன்ற ஒரு பதிவு ஒன்றால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் கஸ்தூரி.

     விடுமுறையை கழிக்க வந்த இடத்தில் 2 வயது மகள் இறந்தது எப்படி?: நடிகர் விளக்கம் விடுமுறையை கழிக்க வந்த இடத்தில் 2 வயது மகள் இறந்தது எப்படி?: நடிகர் விளக்கம்

    தீட்டு:

    தீட்டு:

    சபரிமலை கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய கூடாது என தடை உள்ளது நாடறிந்த விசயம் தான். அதற்காக பெண்கள் அமைப்புகள் பல போராட்டம் நடத்தி வருவதும், நீதிமன்றம் உத்தரவு கொடுத்ததும் அனைவருக்கும் தெரியும். ஆனால், தீட்டு எனக் கூறி தமிழ் சினிமாவிலும் ஒரு பகுதியில் பெண்களை அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை கஸ்தூரி முன்வைத்துள்ளார்.

    ஜெனரேட்டர் வண்டி:

    ஜெனரேட்டர் வண்டி:

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சபரிமலைக்கு போராடும் அதிமேதாவிகள் இதற்கு என்ன செய்யப்போகிறார்கள்? சினிமா ஜெனெரேட்டர் வண்டிக்குள் ஆண்கள் புழங்கலாம், உறங்கலாம், ஆனால் பெண்கள் எந்த நேரத்திலும் நுழைந்து விட கூடாது .... காரணம் தீட்டாம்!" என காட்டமாகக் கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

    கண்டனங்கள்:

    கண்டனங்கள்:

    வழக்கம் போல, கஸ்தூரியின் இந்தப் பதிவுக்கும் சிலர் கடுமையான கமெண்ட்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர், ‘சபரிமலை பிரச்சினையோடு இதனை ஏன் கொளுத்திப் போடுகிறீர்கள். தேவையில்லாமல் மீண்டும் ஒரு புதிய பிரச்சினைக்கு வழி வகுக்காதீர்கள். இப்ப கமல் சார். அடுத்து நீங்களா?' எனத் தெரிவித்துள்ளனர்.

    என்னுடைய விருப்பம்:

    அதற்கு கஸ்தூரி அளித்துள்ள பதிலில், 'இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. வேலை பார்க்கும் இடங்களில் பெண்களுக்கு எதிரான இந்தப் பாகுபாடு குறித்து தான் இப்படி தெரிவித்துள்ளேன். அதோடு இது என்னுடைய டிவிட்டர் பக்கம். அதில் என்ன பதிவு செய்வது என்பது என்னுடைய விருப்பம்' என பதிலடி கொடுத்துல்ளார்.

    English summary
    In a recent tweet Actress Kasturi compared Sabarimala issue with Tamil cinema generator room and creates controversy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X