லேடீஸ் ஃபஸ்ட்...ஒலிம்பிக் வீராங்கனை மீராபாயை புகழ்ந்து கஸ்தூரி ட்வீட்
சென்னை : நடிகை, சமூக ஆர்வலர், தேச பற்றுமிக்கவர் என தன்னை பல வழிகளில் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் நடிகை கஸ்தூரி, சமூக பிரச்சனை பலவற்றிற்கும் கருத்து தெரிவித்து வருபவர்.

சினிமா, அரசியல், உலகம் என பாரபட்சம் இல்லாமல் அனைத்து துறைகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கும் கருத்து கூறி வருகிறார். அப்படி சில விஷயங்களில் கஸ்தூரி பதிவிடும் கருத்துக்கள் பரபரப்பை கிளப்பி, சர்ச்சையிலும் முடிந்துள்ளன.
அந்த வரிசையில் இன்று இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவை பாராட்டி ட்வீட் செய்துள்ளார் கஸ்தூரி. டோக்கியாவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் பளுதூக்கும் பிரிவில் இந்தியாவிற்காக முதல் பதக்கத்தை பெற்று தந்துள்ளார் மீரா.

இது பற்றி கஸ்தூரி ட்விட்டரில், இந்தியாவிற்கான முதல் பதக்கம். அது தான் லேடீஸ் ஃபஸ்ட். 115 கிலோவை சூப்பராக தூக்கி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். 117 கிலோவை தூக்கி அற்புதமான முயற்சி என குறிப்பிட்டுள்ளார்.
கஸ்தூரியின் இந்த ட்வீட்டை ஏராளமானோர் லைக் செய்து வருகின்றனர். பதக்கம் வென்ற மீரா பாயின் ஃபோட்டோவை பதிவிட்டு, கஸ்தூரி பதிவிட்டுள்ள இந்த ட்வீட்டை பலர் ரீட்வீட்டும் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











