என்ன கொடுமை சார்... சிவாஜியை விட உயர்ந்தவராம் ஜாக்கி ஷெராப்.. சொல்கிறார் ரஜினி சம்பந்தி கஸ்தூரி ராஜா

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை விட இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் உயர்ந்தவர் என இயக்குனர் கஸ்தூரிராஜா கூறியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனைவிட இந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் மிகவும் உயர்ந்தவர் என இயக்குனர் கஸ்தூரிராஜா விழா மேடையில் பாராட்டியுள்ளார்.

நடிகர் தனுஷின் தந்தையும், ரஜினியின் சம்பந்தியும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா, தமிழில் என் ராசாவின் மனசிலே, துள்ளுவதோ இளமை உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை தந்தவர். இவர் கடைசியாக 2006 ஆம் ஆண்டு 'இது காதல் வரும் பருவம்' என்ற படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து, படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வந்தார்.

 Kasturi Raja praises Jackie Shroff

சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின் 'பாண்டி முனி' என்ற படத்தை அவர் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் 'ஜாக்கி ஷெரப்' நாயகனாக நடிக்கிறார். மெகாலி, நிகிஷா படேல் என இரண்டு நாயகிகள் அறிமுகமாகின்றனர். இவர்கள் தவிர பெராரே ,சிவசங்கர், ஷாயாஜி ஷிண்டே, அம்பிகா, வாசுவிக்ரம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு மது அம்பாட் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், சிவசங்கர் நடனத்தையும் கவ னித்துக் கொள்கின்றனர்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு ன்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குநர் கஸ்தூரிராஜா, நடிகர் திலகம் சிவாஜி கணேசனைவிட ஜாக்கி ஷெரீப் உயர்ந்தவர் எனக் கூறினார். அவர் மேலும் பேசியதாவது," நான் பார்த்து வியந்த மனிதர் நடிகர் திலகம் அவர்கள். ஆனால் அவரை விட மிகவும் உயர்ந்தவர் ஜாக்கி ஷெரப். பிறரிடம் எப்படி பழக வேண்டும் என்பதை அவரை பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு விஷயத்தை சொல்கிறேன். அவரது வீட்டிற்கு நான் சென்றிருந்தபோது, சூப்பராக கவனித்தார். வடாபாவ், பிரட் ஆம்லட் என விதம் விதமாக உபசரித்தார். அதுமட்டுமல்ல வாசலுக்கு வந்து வழி அனுப்பியதுடன், என் ஷூவை எடுத்து காலில் மாட்டிவிட்டார். எவ்வளவு பரந்த குணம் அவருக்கு.

 Kasturi Raja praises Jackie Shroff

இப்படி எல்லாம் பேசி காக்கா பிடித்து வைத்துக்கொள்வது நல்லது என நினைக்கிறேன். இந்த படத்தில் அவர் முனீஸ்வரனாக நடிக்க இருக்கிறார். ஒரு அகோரி கதாபாத்திரத்தை செய்ய இருக்கிறார். "

இப்படியாக நீண்டது கஸ்தூரிராஜாவின் ஜாக்கி புராணம்.. கூட்டத்துக்கு வந்த பத்திரிகையாளர்கள், என்னதான் ஐஸ் வைப்பதற்காக பேசினாலும், ஜாக்கி ஷெரப்பை சிவாஜியுடன் ஒப்பிடலாமா என குழம்பியபடி (புலம்பியபடி) கிளம்பினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X