ட்விட்டரில் டிரெண்டாகும் #மேதகு.. இந்த படத்திற்கு மெயின்ஸ்ட்ரீம் கிடைக்கலையே.. கஸ்தூரி கவலை!
சென்னை: ஈழத் தமிழர்களுக்காக போராடிய பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி உள்ள மேதகு நேற்று ஒடிடியில் வெளியானது.
#மேதகு என்கிற ஹாஷ்டேக் சமூக வலைதளத்தில் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், மேதகு படத்திற்கு பெரிய ஒடிடி தளங்கள் ஏதும் கிடைக்காதது குறித்து கவலை தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

பிரபாகரன் பயோபிக்
ஈழத்தின் விடுதலைக்காக போராடிய விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகி உள்ள மேதகு படம் நேற்று BS Value எனும் ஒடிடி தளத்தில் வெளியானது. தி ஃபேமிலி மேன் வெப் தொடரில் வரலாற்றை திரித்துக் கூறியதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு இந்த படம் பதிலடி கொடுக்கும் என சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து தெரிவித்து இருந்தனர்.

டிரெண்டிங்கில் மேதகு
நடிகர் சத்யராஜ், இயக்குநர் நவீன், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பலரும் இந்த படத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்து இருந்தனர். #மேதகு என்ற ஹாஷ்டேக்கை தமிழ் ரசிகர்கள் ட்விட்டரில் தற்போது டாப் டிரெண்டிங்கில் டிரெண்ட் செய்து மேதகு படத்தின் சில காட்சிகளையும் புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

சமந்தா கிடையாது
இது தான் உண்மையான கதை. சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் 2 போன்ற சித்தரிக்கப்பட்ட கதை அல்ல என்று சிங்கள போலீசாரை குடத்தை வைத்து பெண் ஒருவர் அடிக்கும் காட்சி புகைப்படத்தை பதிவிட்டு பலரும் பாராட்டி வருகின்றனர்.

தக்க பதிலடி
அமேசான் பிரைமில் சமந்தா மற்றும் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான திரிக்கப்பட்ட தி ஃபேமிலி மேன் கதைக்கு தக்க பதிலடி என்றும் செருப்படி என்றும் நேற்று வெளியான மேதகு படத்தை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.

கஸ்தூரி கவலை
நெட்பிளிக்ஸ், அமேசான், சோனி லைவ், ஜி5 போன்ற பெரிய ஒடிடி தளங்களில் இந்த மேதகு படம் வெளியாகி இருந்தால் பல கோடி பேரை சென்று சேர்ந்திருக்கும் ஆனால், இப்படியொரு படத்திற்கு அந்த வரவேற்பு கிடைக்காதது கவலை அளிப்பதாக நடிகை கஸ்தூரி பதிவிட்டுள்ள ட்வீட்டும் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











