நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: ரொம்ப காலம் இப்படியே சந்தோஷமா வாழணும்.. கஸ்தூரி வாழ்த்து!
சென்னை: மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் பார்க் சொகுசு ஹோட்டலில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்று வருகிறது.
Recommended Video
ரொம்பவே சீக்ரெட்டான திருமணமாக நடைபெற்று வரும் இந்த திருமணம் குறித்த எந்தவொரு புகைப்படங்களும் இதுவரை லீக் ஆகவில்லை.
இன்று திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் அடுத்த அடி வைக்கப்போகும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு முதல் ஆளாக வாழ்த்து சொல்லி இருக்கிறார் நடிகை கஸ்தூரி.

பக்கா பிளான்
நெட்பிளிக்ஸில் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்ப பிளான் போட்டுள்ளார் நடிகை நயன்தாரா என்றும் இயக்குநர் கெளதம் மேனன் அதற்கான வேலைகளை கவனித்து வருகிறார் என்றும் தகவல்கள் வெளியான நிலையில், இதுவரை ஒரு புகைப்படம் கூட சமூக வலைதளங்களில் கசியாமல் பக்காவாக பாதுகாத்து வருகின்றனர்.

டிரெண்டான அழைப்பிதழ்
குரியன் கொடியாட்டு மற்றும் ஓமன குரியனின் மகளான நயன்தாராவுக்கும் மறைந்த சிவகொழுந்து மற்றும் மீனாகுமாரியின் மகனான விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதியான இன்று மகாபலிபுரத்தில் உள்ள பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் மற்றும் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் சூழ திருமண விழா காலை 8.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது என்கிற அறிவிப்புடன் கூடிய அழைப்பிதழ் சமூக வலைதளத்தில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

கஸ்தூரி வாழ்த்து
சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற உள்ள நிலையில் நடிகை கஸ்தூரி முதல் ஆளாக தனது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு நயன்தாரா ரசிகர்களை சந்தோஷப்படுத்தி உள்ளார். கஸ்தூரியை தொடர்ந்து இன்று பல பிரபலங்கள் வாழ்த்தப் போகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப காலம் வாழ வேண்டும்
"Heartiest congratulations. Wish you a long and fulfilling married life." என நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நீண்ட காலம் திருமண வாழ்க்கையை முழுதாக வாழ வேண்டும் எனக் குறிப்பிட்டு தனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நீங்க திருமணத்துக்கு போகலையா என கஸ்தூரியிடம் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

வாசுகி பாஸ்கர் வாழ்த்து
டார்லிங் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனுக்கு என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள். கடவுள் உங்களுக்கு அதிகப்படியான சந்தோஷத்தையும் அன்பையும் கொடுப்பார் என வேண்டிக் கொள்கிறேன் என பிரபல ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கரும் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











