கோவிட் இடியட்ஸ்.. நகை மற்றும் ஜவுளி்க் கடைகளில் முண்டியடித்த கூட்டம்.. நடிகை கஸ்தூரி காட்டம்!
சென்னை: ஞாயிற்றுக்கிழமை அன்று கடைகளில் அலைமோதிய கூட்டத்தால் கடுப்பான நடிகை கஸ்தூரி "தாலிய விட தங்கம் தான் முக்கியமா போச்சா" என விளாசியுள்ளார்.
Recommended Video
இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு, சனி மற்றும் ஞாயிறுகளில் அனைத்து கடைகளையும் இரவு 9 மணி வரை திறந்திருக்க தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது.

மக்கள் கூட்டம்
கடந்த இரு வாரங்களாக சில தளர்வுகளுடன் போடப்பட்டிருந்த லாக்டவுன் காரணமாக காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மட்டுமே இயங்கி வந்தன. தமிழக அரசின் இந்த திடீர் அனுமதியால் நகைக் கடை, துணிக்கடை என அனைத்து கடைகளும் நேற்று திறக்கப்பட்ட நிலையில், அனைத்து கடைகளிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்று பொருட்களை வாங்கிக் குவித்தனர்.

கொரோனா பயமே இல்லை
கொரோனாவால் தினமும் சொந்தங்களை இழந்து தவித்து வந்த மக்கள், மருத்துவமனைகளில் படுக்கை இல்லாமல் தவித்து வந்த மக்கள் இப்படி அனைத்து கடைகளும் திறக்கப்பட்ட நிலையில், எந்தவொரு அச்சமும் இன்றி இப்படி முண்டியடித்துக் கொண்டு கொரோனா பயமே இல்லாமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாதிப்பு அதிகரிக்குமா
நேற்று ஒரு நாள் கடை வீதிகளில் குவிந்த மக்கள் வெள்ளத்தின் பாதிப்பு இந்த வாரம் தெரிய வரும் என்றும், மேலும், கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் அச்சம் உள்ளதாக பல பிரபலங்களும் மருத்துவ நிபுணர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். கிராமப் புறங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டால் மேலும், சிக்கல் ஏற்படும் என்றும் கூறியுள்ளனர்.

கஸ்தூரி ட்வீட்
சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் நேற்று ஜவுளிக் கடை, நகைக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியதை பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டனர். அத்தியாவசிய தேவைகளை தாண்டி மக்கள் ஆடம்பர தேவைகளுக்கு ஏன் இந்த இக்கட்டான நேரத்தில் அலைகின்றனர் என நடிகை கஸ்தூரி போட்டுள்ள ட்வீட் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தாலியை விட தங்கம் முக்கியமா
சென்னை திநகர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியமான கடைவீதிகள் முழுவதும் நிரம்பி வழிந்த காட்சிகளின் புகைப்படங்களை ஷேர் செய்த நடிகை கஸ்தூரி, "முண்டியடிச்சி துணி நகை வாங்கலையின்னாதான் என்னவாம்? தாலிய விட தங்கம் தான் முக்கியமா போச்சா?" என கொரோனா அச்சம் இல்லாமல் அலைந்த மக்களை விளாசி உள்ளார்.

சேஃப்டியை விட சேலை முக்கியமா
நகைக் கடைகளிலும், ஜவுளிக் கடைகளிலும் மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு வாங்கியது அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நேரம் புதுத் துணிகளை வாங்கிக் கொண்டு எந்த விசேஷத்திற்கு செல்லப் போகிறார்கள் என்கிற கேள்வியும் பலரும் எழுப்பி வருகின்றனர். நடிகை கஸ்தூரி, தனது ட்வீட்டில் சேஃப்டியை விட சேலை முக்கியமா என்றும் சாடியுள்ளார்.

கொரோனாவை எதுக்கு வாங்கணும்
"கல்யாணம்/சடங்கு மாதிரி தவிர்க்கமுடியாத purchasesக்கு whatsapp, phone, online எல்லா option உம் இருக்கு. கடைக்கு போயி கொரோனாவை எதுக்கு வாங்கணும்? COVIDIOTS" என மக்களை கொரோனா இடியட்டுகள் என்றும் திட்டித் தீர்த்துள்ளார். தனி மனித கட்டுப்பாடு இல்லாதவரை அரசாங்க கட்டுப்பாடுகள் எந்த வகையிலும் பயனளிக்காது என்பது தான் உண்மை.


Click it and Unblock the Notifications











