பாரில் சரக்கடித்த ஷாருக்கான் மகன்.. பங்கமாக கலாய்த்த நெட்டிசன்கள்.. நடிகை கஸ்தூரி ஆதரவு ட்வீட்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் பார் ஒன்றில் சரக்கு அடிக்கும் வீடியோ டிரெண்டாகி ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
முன்னதாக போதைப் பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார் ஆர்யான் கான்.
ஆர்யான் கான் பாரில் சரக்கடிக்கக் கூடாதா? அவரை நிம்மதியா விடுங்கப்பா என ரசிகர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், நடிகை கஸ்தூரியும் ஆதரவு ட்வீட் போட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாலிவுட் பாட்ஷா
பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் நடிகர் ஷாருக்கான் 4 ஆண்டுகளாக படங்கள் ஏதும் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில், ராக்கெட்ரி படம் மூலம் மீண்டும் வெள்ளித் திரையில் தோன்றினார். தமிழில் சூர்யா செய்த கேமியோ ரோலில் இந்தியில் ஷாருக்கான் நடித்திருந்தார். இயக்குநர் அட்லியின் ஜவான், சித்தார்த் ஆனந்தின் பதான், ராஜ்குமார் ஹிரானியின் டங்கி உள்ளிட்ட 3 படங்களில் ஹீரோவாக நடித்து வரும் ஷாருக்கான், அடுத்த ஆண்டு 2 படங்களை அடுத்தடுத்து ரிலீஸ் செய்யும் திட்டத்தில் உள்ளார்.

ஷாருக்கான் மகன்
நண்பர்களுடன் சொகுசு கப்பலில் போதைப் பார்ட்டியில் பங்கேற்றார் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் என அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியது. பின்னர், பெரும் போராட்டத்திற்கு பிறகு தனது மகனை ஷாருக்கான் ஜாமினில் கொண்டு வந்தார். வழக்கை விசாரித்த வந்த அதிகாரி மாற்றப்பட்ட நிலையில், ஆர்யான் கான் குற்றமற்றவர் என போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சான்றளித்தனர். தனது பாஸ்போர்ட்டை திருப்பித் தர வேண்டும் என்றும் சமீபத்தில் நீதிமன்றத்தை நாடி இருந்தார்.

பாரில் சரக்கு
இந்நிலையில் ஷாருக்கானின் மகன் ஆர்யான் கான் பார் ஒன்றில் சரக்கடிக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோ அதிகளவில் ஷேர் செய்து பாலிவுட் ரசிகர்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கி விட்டாரா ஆர்யான் கான் என்றும், இந்த வயசுலேயே, சரக்கு, போதைப் பொருள் என கெட்டுப் போய்க் கிடக்கிறாரே என ஏகப்பட்ட மீம்களும், கமெண்ட்டுகளும் குவிந்துள்ளன.

கஸ்தூரி ஆதரவு
அதே சமயம், அவர் பாரில் சரக்கு தானே அடிக்கிறார். அதற்கு கூட அவருக்கு உரிமை இல்லையா? குடிப்பது ஒன்றும் தவறு இல்லையே, நாட்டில் எத்தனை இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகி உள்ளனர் என ரசிகர்கள் ஆதரவும் அளித்துள்ளனர். நடிகை கஸ்தூரி ஆர்யான் கான் செயலை பாராட்டித் தள்ளிப் போட்ட ட்வீட் தான் தற்போது டிரெண்டாகி வருகிறது. ஒரு ஷாட் குடித்தவுடன் மாஸ்க் போட்டுக் கொள்ளும் அவரை பாராட்டத் தான் வேண்டும் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











