மில்லியன் முகங்களோடு.. மில்லியன் மனங்களை வென்ற மனிதர்.. கமலுக்கு சூப்பரா வாழ்த்து சொன்ன கஸ்தூரி!

சென்னை: மில்லியன் முகங்களோடு, மில்லியன் மனங்களை வென்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நடிகை கஸ்தூரி வாழ்த்தி உள்ளார்.

இந்தியன் படத்தில் கமல்ஹாசனுக்கு தங்கையாகவும் மகளாகவும் நடித்தவர் கஸ்தூரி.

கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.

66 வயதினிலே

66 வயதினிலே

தனது வயதும், சினிமா வாழ்க்கையும் கிட்டத்தட்ட ஒன்றாகவே கடந்து போய்க் கொண்டிருக்கும் ஒரே கலைஞன் கமல்ஹாசன் தான். உலகிலேயே தேடினாலும், இப்படியொரு பன்முகத் திறமை கொண்ட கலைஞனை கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. 66 வயசிலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு துள்ளலாக வரும் கமலை பார்த்தால், 40 வயசுன்னு தான் சொல்லத் தோணுது! பிறந்தநாள் வாழ்த்துக்கள் கமல் சார்!

சமூக வலைதளம் முழுவதும் சகலகலா வல்லவன்

சமூக வலைதளம் முழுவதும் சகலகலா வல்லவன்

உலகநாயகன் கமல்ஹாசனின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள், கலைஞர்கள் மொழி பேதங்களை கடந்து நம்மவருக்கு வாழ்த்துக்களை சொல்லி வருகின்றனர். சமூக வலைதளங்கள் முழுவதும் சகலகலா வல்லவனின் சாதனைகள் மாஷ் அப்களாகவும், போட்டோக்களாகவும் நினைவுகளாகவும் நீண்டு கிடக்கின்றன.

கஸ்தூரி வாழ்த்து

கஸ்தூரி வாழ்த்து

" The man with a million faces. Who won a million minds. Happy birthday to MNM chief Kamalhaasan" (மில்லியன் முகங்களோடு, மில்லியன் மனங்களை வென்ற மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்) என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தி உள்ளார்.

மகளாகவும் தங்கையாகவும்

மகளாகவும் தங்கையாகவும்

1996ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் படத்தில் நடிகர் கமல் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். தந்தை கமலுக்கு மகளாகவும், அண்ணன் கமலுக்கு தங்கையாகவும் நடிகை கஸ்தூரி நடித்திருப்பார். பச்சை கிளிகள் தோளோடு பாடலை எப்போதுமே ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

பிக் பாஸ் போட்டியாளர்

பிக் பாஸ் போட்டியாளர்

நடிகை கஸ்தூரி, கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கமல் முன்னிலையில் அறிமுகமாகி கலந்து கொண்டார். தற்போதும் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்தை சொல்ல அந்த புகைப்படத்தையே பகிர்ந்து தான் வாழ்த்தி உள்ளார். நடிகராக வெற்றிபெற்ற கமல், அரசியல் தலைவராகவும் வெற்றி பெற ஏகப்பட்ட பிரபலங்கள் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X