இது யார்னு கண்டுபிடிங்க பார்ப்போம்: கஷ்டமான டாஸ்க் கொடுத்த கஸ்தூரி
Recommended Video

சென்னை:இது யார் என்று கண்டுபிடிக்குமாறு கூறி புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் கஸ்தூரி.
தமிழ் படம் 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் கஸ்தூரி. அந்த படத்தின் முதல் பாகத்தில் குத்து விளக்கு பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் படத்திற்கு தன் பங்கிற்கு விளம்பரம் தேடியுள்ளார் கஸ்தூரி.
புகைப்படம்
தான் முதுகை காட்டி அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு இது யார் என்று கண்டுபிடிக்குமாறு ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார் கஸ்தூரி.
கஸ்தூரி
ஏன் இப்படி கஸ்தூரி என்று ஒருவர் கேட்க அவரோ 'ஒய் நாட்' என்று தமிழ் படம் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரையே பதிலாக அளித்துள்ளார். ஃபுல் ஃபார்மில் இருக்கிறார் கஸ்தூரி.
கவர்ச்சி
வயதான கலாத்தில் இப்படி எல்லாம் நடிப்பது தேவையா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
வாழ்த்து
கஸ்தூரியின் புகைப்படத்தை பார்த்து சிலர் விமர்சித்தாலும் பலர் அவரை பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











