பிகில் படத்திற்கு இலவச விளம்பரமா?.. அட போங்க பாஸ்.. கஸ்தூரி போட்ட ஒரு வைரல் டிவிட்!

நடிகர் விஜயின் அடுத்த படத்திற்கும் இலவசமாக தமிழக அரசு விளம்பரம் செய்கிறது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Recommended Video

Bigil Twitter trending:டிவிட்டர்யில் கலக்கும் பிகில் First Look

சென்னை: நடிகர் விஜயின் அடுத்த படத்திற்கும் இலவசமாக தமிழக அரசு விளம்பரம் செய்கிறது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் படம் சிக்கல் இல்லாமல் வெளியாவது என்பது வரலாற்றிலேயே இல்லை என்றுதான் கூற வேண்டும். வேலாயுதம் படத்தில் இருந்தே நடிகர் விஜய் படங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது.

அதிலும் கடைசியாக தெறி, மெர்சல், சர்க்கார் படங்களுக்கு தமிழக அரசு தரப்பில் இருந்து பெரிய அளவில் பிரச்சனை செய்யப்பட்டது. அரசுக்கு எதிராக விஜய் பேசியதாக கூறி இந்த படங்களுக்கு பிரச்சனை ஏற்பட்டது.

மீண்டும்

மீண்டும்

இந்த நிலையில் பிகில் படத்திற்கும் தற்போது அதேபோல் பிரச்சனை தொடங்கி உள்ளது. நேற்று பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்று சென்னை சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. கல்லூரிக்குள் தனியார் சினிமா விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது எப்படி என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறை சார்பாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

சிக்கல்

இது தொடர்பாக நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். அதில், அட தற்போது தளபதியின் அடுத்த படத்திற்கும் இலவசமாக தமிழக அரசு விளம்பரம் செய்கிறது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி என்ன

கஸ்தூரி என்ன

இதற்கு முன்பே விஜயின் பிகில் ஆடியோ வெளியீட்டு விழா பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்துள்ளார். அதில், விஜய் நல்ல நேர்மறையாக பேசி இருக்கிறார்.. அரசியலை தொட்டுள்ளார், பேனர் மூலம் நடக்கும் மரணங்களை சீண்டி உள்ளார். சுபஸ்ரீ குறித்து மிகவும் நேர்மையாக பேசி உள்ளார்.

செமையா இருக்கு

அதேபோல் விஜய் தனது ரசிகர்களுக்காக பேசியுள்ளார். விஜயை கலாய்ப்பதை நிறுத்துங்கள். நடிகர் விஜய் தனது ஆடியோ வெளியீட்டு விழாவை மிகவும் திறமையாக பயன்படுத்தி உள்ளார், என்று நடிகை கஸ்தூரி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X