»   »  பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசைப்படும் கஸ்தூரி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க ஆசைப்படும் கஸ்தூரி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை கஸ்தூரிக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆசை வந்துள்ளது.

சமூக வலதைளங்கள் பக்கம் போனாலே பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி தான் பேச்சாக கிடக்கிறது. பெரும்பாலானோர் பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள்.

சிலர் பிக் பாஸ் போட்டியாளர்களில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.

கஸ்தூரி

கஸ்தூரி

நடிகை கஸ்தூரியை தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு விஜய் டிவிக்காரர்கள் பலமுறை அணுகியும் அவர் மறுத்துவிட்டார். குழந்தைகளை விட்டுவிட்டு 100 நாட்கள் இருக்க வேண்டும் என்பதால் முடியாது என்றார்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாவிட்டாலும் கஸ்தூரி அது குறித்து ட்விட்டரில் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆசை வந்துள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர்.

ஜூனியர் என்.டி.ஆர். நடத்தும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அசை வந்துள்ளது கஸ்தூரிக்கு. இதை அவரே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு

தமிழை விட்டுட்டு தெலுங்கு பிக் பாஸை ஆதரிக்கிறீர்களா என்று ஒருவர் ட்விட்டரில் கேட்டதற்கு, கஸ்தூரி கூறியதாவது, தெலுங்கு பதிப்பு ஜாலியாக உள்ளது. அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர், நெகட்டிவிட்டி இல்லை என்றார்.

English summary
Actress Kasturi tweeted that, 'Looks like #biggbossTelugu folks are having a BLAST. and OMG #NTR !! Wouldnt mind being in THAt house at all ! #JustBabysitMyKid :))'
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil