அடல்ட் அலர்ட்.. அப்போ சின்ன பையன்.. இப்போ சின்ன பொண்ணு.. டைட்டானிக் ரோஸுக்கு இதே வேலையா போச்சு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: டைட்டானிக் படத்தில் நிர்வாணமாக காட்சி தந்து அனைவரையும் திக்குமுக்காட வைத்த கேட் வின்ஸ்லெட், இப்போ அம்மோனைட் படத்தின் டீசரிலும் லெஸ்பியனாக நடித்து மிரட்டுகிறார்.

ஆஸ்கர், எம்மி, கிராமி என ஹாலிவுட்டில் கொடுக்கப்படும் ஏகப்பட்ட உயரிய விருதுகளை வாங்கி குவித்துள்ள நடிகை கேட் வின்ஸ்லெட்.

44 வயதாகும் இவர் நடித்துள்ள அம்மோனைட் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி உலகளவில் வைரலாகி வருகிறது.

டைட்டானிக் ரோஸ்

டைட்டானிக் ரோஸ்

கேட் வின்ஸ்லெட் என்று சொல்வதை விட டைட்டானிக் ரோஸ் என்று சொன்னால், ஓ அவர் தானா இவர் என்று ரசிகர்கள் சட்டென்று நினைவுபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும். ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் லியானார்டோ டிகாப்ரியோவுக்கு ஜோடியாக 1997ம் ஆண்டு வெளியான டைட்டானிக் படத்திலேயே முற்றும் திறந்து நடித்து திகைக்க வைத்தவர்.

இந்திய சாமியார்

இந்திய சாமியார்

டைட்டானிக் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு 1999ம் ஆண்டு நடிகை கேட் வின்ஸ்லெட் நடிப்பில் வெளியான ஹோலி ஸ்மோக் படத்தில், இந்தியாவுக்கு டூருக்கு வரும் அவர், சாமியார் பாபா என்பவரி ஆசிரமத்தில் துறவியாக மாற வேண்டும் என நினைத்து இங்கேயே தங்கிவிடுவார். அவரை குடும்ப வலைக்குள் சிக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் கசமுசா லீலைகள் தான் அந்த படத்தின் கதையே.

சிறுவனுடன் சேட்டை

சிறுவனுடன் சேட்டை

டைட்டானிக் படத்திற்கு ஏகப்பட்ட ஆஸ்கர் விருதுகள் கிடைத்தாலும், நாயகனுக்கும், நாயகிக்கும் ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. கடந்த 2008ம் ஆண்டு வெளியான ரீடர் எனும் படத்தில் சிறுவன் ஒருவனுடன் உடலுறவு கொள்ளும் விதமாக படம் முழுக்க நிர்வாணக் கோலத்தில் நடித்து ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றார் கேட் வின்ஸ்லெட்.

இளம் பெண்ணுடன்

இந்நிலையில், விரைவில் வெளியாகவுள்ள Ammonite படத்தில் 26 வயது இளம் பெண்ணுடன் 44 வயதாகும் நடிகை கேட் வின்ஸ்லெட் லெஸ்பியனாக நடித்து மிரட்டி உள்ளார். சமீபத்தில் வெளியான அந்த படத்தின் ட்ரைலர் உலகம் முழுவதும் காட்டுத் தீயைப் போல பரவி வருகிறது. அந்த டீசரில் ஏகப்பட்ட சில்மிஷக் காட்சிகளும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

அந்த காட்சிகளை இவரே இயக்கியுள்ளார்

அந்த காட்சிகளை இவரே இயக்கியுள்ளார்

மேலும், அம்மோனைட் படத்தில் வரும் செக்ஸ் காட்சிகளை நடிகை கேட் வின்ஸ்லெட்டே இயக்கிக் கொள்ள முழு சுதந்திரத்தை இயக்குநர் ஃபிரான்சிஸ் லீ தனக்கு வழங்கியதாகவும், நடிகை சைரோஸ் ரோஸ்னன் தனது மார்பை முத்தமிட தயக்கம் காட்டும் போது, அவருக்கு அந்த காட்சிகளில் எப்படி நடிப்பது என்பதை சொல்லிக் கொடுத்ததாகவும் அடடே விளக்கம் கொடுத்துள்ளார்.

அவதார் 2

அவதார் 2

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் அவதார் 2 படத்திலும் நடிகை கேட் வின்ஸ்லெட் ரோனல் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். டைட்டானிக் படத்திற்கு பிறகு மீண்டும் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் நடித்து வருவது தனக்கு கிடைத்த பெருமை என சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X