பள்ளி மாணவர்களை ‘கதை’ எழுத வைக்கும் ‘கத சொல்லப் போறோம்’ டீம்!

By Mayura Akilan

சென்னை: கத சொல்லப் போறோம் படக்குழு பள்ளி மாணவர்களுக்கு அறிவித்திருந்த கதைப் போட்டிக்கு கடந்த 20 நாட்களில் மட்டும் சுமார் ஐம்பதாயிரம் கதைகள் வந்து சேர்ந்துள்ளதாம்.

இ5 எண்டர்டைன்மென்ட்ஸ் இந்தியா (பி) லிட் வழங்க ரிலாக்ஸ் ஆட்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் 'கத சொல்லப் போறோம்'. எஸ்.கல்யாண் - ஜே.ஜெயகிருஷ்ணன் இருவரும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எஸ்.கல்யாண்.

இப்படத்தில் ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, முன்டாசுப்பட்டி காளி, பசங்க சிவகுமார் ஆகியோர் நடிக்கிறார்கள்.

குழந்தை நட்சத்திரங்கள்...

குழந்தை நட்சத்திரங்கள்...

இவர்கள் தவிர முக்கிய கதாப்பாத்திரங்களில் குழந்தை நட்சத்திரங்களான ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த்,அரவிந்த், ராகுல், சாமு, அர்ஜுன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கூட்டுக் குடும்பம்...

கூட்டுக் குடும்பம்...

கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த காலங்களில் குழந்தைகளுக்கு கதை சொல்ல தாத்தா - பாட்டிகள் என உறவுகள் இருந்தது. ஆனால், தனிக்குடும்பங்கள் அதிகமாகி விட்ட பிறகு குழந்தைகளுக்கு கதை சொல்ல யாருக்கும் நேரமிருப்பதில்லை.

போட்டி...

போட்டி...

எனவே, தற்கால குழந்தைகளுக்கு கதை எழுதும் ஆர்வம், கற்பனைத் திறன் இருக்கிறதா என்பதை சோதித்தறிய தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் போட்டி ஒன்றை அறிவித்தது கத சொல்லப் போறோம் டீம். இதற்காக சுமார் ஐந்து லட்சம் விண்ணப்பங்கள் வழங்கப் பட்டதாம்.

50 ஆயிரம் கதைகள்...

50 ஆயிரம் கதைகள்...

கொடுத்த 20 நாட்களுக்குள் ஏறக்குறைய ஐம்பதாயிரம் சிறுகதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்களாம் தமிழக பள்ளிக் குழந்தைகள். இன்னும் சில நாட்களில் இந்த எண்ணிக்கை நிச்சயம் ஒரு லட்சத்தைத் தாண்டும் என படக்குழு நம்புகிறதாம்.

சிறந்த கதைக்கு பரிசு...

சிறந்த கதைக்கு பரிசு...

மொத்தக் கதையிலிருந்து சிறந்த கதைகளைத் தேர்வு செய்து அவற்றிற்கு படக்குழு பரிசு வழங்க உள்ளது.

எங்கள் லட்சியம்...

எங்கள் லட்சியம்...

என்னைப் போன்ற இயக்குனர்களை அடையாளம் காட்ட நாளைய இயக்குனர்கள் போன்ற களம் இருக்கிற மாதிரி வளரும் தலைமுறை சிந்தனையாளர்களை இனம் காண்பதே எங்கள் லட்சியம்" என இக்கதைப் போட்டிக்கான காரணம் கூறுகிறார் இப்படத்தின் இயக்குநர்.

ஒளிப்பதிவு...

ஒளிப்பதிவு...

இப்படத்திற்கு ஒளிப்பதிவு -ஜெபின், இசை-பவன், பாடல்கள்-கல்யாண், வினோதன், கலை-பத்மநாபன், நடனம்- எஸ்.எல்.பாலாஜி, எடிட்டிங்-விஜய், தயாரிப்பு நிர்வாகம்-பெருமாள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X