Don't Miss!
- News ஏசியை கழுத்தில் மாட்டி சுற்றாத குறையாக பயன்படுத்துறீங்களா? இந்த தவறை மட்டும் செய்யாதீங்க!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஷாலின் கதகளி டிரெய்லர், பாடல்கள் 24 ம் தேதி... படம் பொங்கலுக்கு
சென்னை: விஷால்- கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகியிருக்கும் கதகளி படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் வருகின்ற 24 ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.
பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால், கேத்தரின் தெரசா, ரெஜினா, கருணாஸ் மற்றும் சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் கதகளி.
இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரியுடன் இணைந்து தனது பசங்க புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பாண்டிராஜ் தயாரித்து இருக்கிறார்.
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை வருகின்ற 24ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அடுத்ததாக பாடல்களை வெளியிடுகின்றனர்.
With ur blessings #Kathakali AudioLaunch &Trailer from Dec24 #KathakaliPongalRelease @VishalKOfficial @pasangaprodns pic.twitter.com/xqAsJMIg9c
— Pandiraj (@pandiraj3) December 19, 2015
இதனை இயக்குநர் பாண்டிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். ஆக்ஷனை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படம் வருகின்ற பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாகிறது.
வழக்கமாக பேய்ப் படங்களின் வெளியீட்டு உரிமையை வாங்கி வெளியிடும் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் கதகளி படத்தின் விநியோக உரிமையை வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.