'பாயும் புலி' விஷாலை மீட்டது பாண்டிராஜின் 'கதகளி'

By Manjula

சென்னை: விஷால், கேத்தரின் தெரசா, கருணாகரன், நாசர், சூரி மற்றும் பலர் நடிப்பில் இன்று உலகெங்கும் வெளியாகியிருக்கும் படம் கதகளி.

பாண்டிராஜ் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமித்து இருக்கிறார். கதகளி மூலம் முதன்முறையாக பாண்டிராஜ் ஆக்ஷன் பாதையில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

பாயும் புலியில் கவிழ்ந்த விஷால் கதகளியில் மீண்டு வந்தாரா? என்பதைப் பார்க்கலாம்.

ரோபோ சங்கர்

"கதகளி பார்த்தேன். டைட்டில் கார்டுல ஆரம்பிச்சு படம் முடியற வரைக்கும் பாண்டிராஜின் இயக்கம் நல்லா இருந்தது. ரஜினிமுருகன் படத்திற்கு அப்புறம் விஜய்,அஜீத் பட காட்சிகளை இதற்கும் பயன்படுத்தி இருக்கின்றனர்" என்று நடிகர் ரோபோ சங்கர் பாராட்டி இருக்கிறார்.

இன்னும் எதிர்பார்க்கிறேன்

"கதகளி தொடக்கம் மிகவும் மெதுவாக உள்ளது ஆனால் இடைவேளைக்கு முன்னால் ஒரு வேகம் திரைக்கதையில் இருக்கும் என்று நம்புகிறேன். 2 வது பாதியில் விறுவிறுப்பும், கடினமான திரைக்கதையும் இருக்கும் என எதிர்பார்க்கிறேன்" என்று ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார்.

நாங்க செய்ய மாட்டோமா?

"ஏன் அவங்க தான் வெடி போட்டு செய்வாங்களா? நாங்கள்ளாம் போட மாட்டோமா?" வசனங்கள் சூப்பர் என்று பாராட்டி இருக்கிறார்" அருள்முத்து.

விஷால் மீண்டுவிட்டார்

"கதகளி படத்தோட நீளம் 2 மணி நேரங்கிறது மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட். படம் நன்றாக இருக்கிறது விஷாலுக்கு நல்லதொரு மறுபிரவேசத்தைத் தந்திருக்கிறது" என்று கூறியிருக்கிறார் பர்வேஷ் ஆஸ்மி.

2 வது பாதி

"கதகளி 2 வது பாதி மிகவும் வலுவாக இருக்கிறது முதல் பாதியை விட 2 வது பாதியை பாண்டிராஜ் நன்றாக உருவாக்கி இருக்கிறார்"என்று தேவ. பழனியப்பன் பதிவு செய்திருக்கிறார்.

செம படம்

"கதகளி பார்த்துக் கொண்டிருக்கிறேன் செம்ம படம். ஹிப்ஹாப் தமிழா பிஜிஎம் மரண மாஸ், படத்தின் விஷுவல் எபக்ட்ஸ் மாஸ்" என்று படத்தைப் பாராட்டி இருக்கிறார் பிகே பிரவீன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X