காதுகளில் மட்டுமல்ல, டீசரிலும் ஹிட்டடித்த ‘செல்ஃபி புள்ள’.. ஒரே நாளில் 9 லட்சம் ரசிகர்கள் பார்த்தனர்
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் - சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் கத்தி. அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் உறவினரின் நிறுவனம் லைகா எனக் கூறி கத்தி படத்திற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், இப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என தயாரிப்புத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆத்தி...
3 நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட ‘ஆத்தி' பாடல் டீசர் ஒருநாளிலேயே 7 லட்சும் பார்வையாளர்களை தொட்டது. இதுவரை இந்த டீசரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

செல்ஃபி புள்ள...
இந்நிலையில், நேற்று விஜய் தனது சொந்தக்குரலில் பாடிய ‘செல்ஃபி புள்ள' பாடலின் டீசர் வெளியிடப்பட்டது. பிரம்மாண்ட அரங்கில், விஜய்-சமந்தா ஆடிப்பாடிய இந்த பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

9 லட்சம் பேர்...
இந்தப் பாடல் டீசர் ஒரே நாளில் 9 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

எதிர்பார்ப்பு...
முன்னதாக விஜய் - முருகதாஸ் இயக்கத்தில் உருவான துப்பாக்கிப் படம் வெற்றி பெற்றதால், ரசிகர்கள் இப்படத்தையும் அதிக ஆர்வத்துடம் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











