கதிர் விளையாடும் கால்பந்து... முக்கியத்துவம் தரும் ஜடா - டிசம்பர் வெளியீடு

சென்னை: நடிகர் கதிர் நடிப்பில் அறிமுக இயக்குர் குமரன் இயக்கத்தில் உருவாகும் ஜடா திரைப்படம் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இதனை நடிகர் கதிரும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் கதில் கால்பந்து விளையாட்டு வீரராக நடித்துள்ளார். ஏற்கனவே, பிகில் படத்திலும் இவர் கால்பந்து வீரராக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் கதிர் மிக முக்கியமானவர். இவர் இசையமைப்பாளர் ஜீ/வி.பிராகாஷ் தயாரிப்பில் உருவான மதயானை கூட்டம் படம் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர். தனது முதல் படத்திலே அனைவரின் கவனத்தை ஈர்த்த கதிர்.

Kathir Acts Jada Film will be released on December month

அதற்கு பிறகு கிருமி எனும் மிக முக்கிய படத்தில் நடித்தார். சமூகத்தில் நடக்கும் அநீதியை தட்டிக் கேட்பவன் மட்டும் ஹீரோ அல்ல. அதிலிருந்து விலகிப் போறவனும் ஹீரோ தான் என்று அதுவரை தமிழ் சினிமா பார்த்திராத வித்தியாசமான கதை களத்தில் நடித்து இருந்தார் கதிர். அந்த படத்தை இயக்கியவர்கள் அனுசரண் மற்றும் அனுசரண் முருகையன்.

இப்படத்திற்கு கதை எழுதி இருந்தார் காக்க முட்டை இயக்குநர் மணிகண்டன். என்னோடு விளையாடு மற்றும் விக்ரம் வேதா படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்த கதிர் அதற்கு பிறகு பா.ரஞ்சித் தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான பரியேறும் பெருமாள் படத்தில் நடித்தார். இந்தப்படம் இவருக்கு மிகப் பெரிய பாரட்டை பெற்றுத் தந்தது.

அது மட்டுமின்றி பல விருதுகளை இப்படம் வென்றது. அதற்கு பிறகு, இவர் சிகை படத்தில் ஒரு ஒரினச் சேர்க்கையாளராக நடித்திருந்தார். அது பலரையும் திரும்பி பார்க்க வைத்திருந்தது. இதன் பிறகு கதிர் போலீஸாக நடித்து வெளி வந்த படம் தான் சத்ரு. இப்படத்தின் திரைக்கதை சுவாரஸ்யமானதாக இருந்தாலும், படம் வெகுஜன ரசிகர்களை கவரவில்லை.

Kathir Acts Jada Film will be released on December month

ஆனாலும் படத்தில் தன் நடிப்பை சீரிஸயாக பதிவு செய்திருந்தார். இப்படி தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் மாறுபட்ட நடிப்பை வெளிபடுத்தி வரும் கதிர், பிகில் படத்தில் நடித்திருந்தார். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த கதிர் ,விஜய்யுடன் நடித்தது தனக்கு மிக சந்தோஷமாக இருந்தது என்று கூறியிருந்தார்.

தற்போது மீண்டும் ஒரு கால்பந்து படத்தில் கதிர் நடித்து வருகிறார் என்பது நமக்கு தெரியும் ,அந்த படத்திற்கு ஜடா என்று தலைப்பு வைக்கப்பட்டு இருந்தது. படத்தில் கதிருடன் கதாநாயகியாக அறிமுகமாகிறார் ரோஷினி மற்றும் கிஷோர், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தை அறிமுக இயக்குநரான குமரன் இயக்கி வருகிறார்.

ஜடா படத்தை தயாரித்து வருகின்றார் போயட் ஸ்டூடியோஸின் விக்னேஷ் ராஜகோபால். ஜடா படத்தின் முன்னோட்டம், ஏற்கனவே வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படம் டிசம்பரில் வெளியாகும் என படத்தின் நாயகன் கதிர் தனது அதிகாரபூர்வ டீவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X