53 வருட அப்பாவின் ஆசை நிறைவேறிடுச்சு.. சந்தோஷத்தில் நடிகர் கதிர்.. என்ன சேதின்னு தெரியுமா?

சென்னை: பரியேறும் பெருமாள், பிகில், ஜடா என நடித்து வரும் நடிகர் கதிரின் அப்பாவின் நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளது.

மதயானைக்கூட்டம் படத்தில் நடிகை ஓவியாவுடன் இணைந்து நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் நடிகர் கதிர்.

மதயானைக்கூட்டம், கிருமி, விக்ரம் வேதா, பரியேறும் பெருமாள், பிகில் என பல படங்கள் இவருக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன.

விஜய்க்கு நண்பனாக

விஜய்க்கு நண்பனாக

மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தில் சிறந்த நடிகராக பாராட்டுக்களை அள்ளிய கதிர், கடந்த ஆண்டு தீபாவளிக்கு அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் படத்தில், பெண்கள் அணியின் கால்பந்தாட்ட கோச்சாகவும், நடிகர் விஜய்யின் நண்பனாகவும் நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார்.

அப்பாவின் கனவு

அப்பாவின் கனவு

இந்நிலையில், தனது அப்பாவின் நீண்ட நாள் கனவு நனவாகி விட்ட ரகசியத்தை, நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார் நடிகர் கதிர். அப்பா, அம்மாவின் புகைப்படத்தை பதிவிட்ட, அவர் 53 வருடங்களாக நடிகனாக வேண்டும் என தனது தந்தை கண்ட கனவு தற்போது நிறைவேறி உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

எந்த படத்தில்

எந்த படத்தில்

அதுவும் அவர் எந்த படத்தில் நடிகராக அறிமுகமாகி உள்ளார் என்பது தெரியுமா. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தில் தானாம். சின்ன கதாபாத்திரமாக இருந்தாலும், தனது அப்பாவின் சிறு வயது ஆசை தற்போது நிறைவேறியுள்ளது தனக்கு சந்தோஷத்தை அளிப்பதாக டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஹேப்பி பர்த்டே அப்பா

ஹேப்பி பர்த்டே அப்பா

தனது அப்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த மாஸ்டர் ரகசியத்தை வெளியிட்டு விஜய் ரசிகர்களுக்கு மேலும், ஒரு மாஸ்டர் அப்டேட்டை கொடுத்துள்ளார். விஜய் ரசிகர்கள் மற்றும் கதிரின் ரசிகர்கள், ஹேப்பி பர்த்டே அப்பா என்றும், சினிமாவில் உங்களை போலவே உங்கள் அப்பாவும் சாதிக்கவும் வாழ்த்துக்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்த படம்

அடுத்த படம்

இயக்குநர் பாலாஜி சக்திவேலின் முன்னாள் உதவி இயக்குநரான பிரபாகரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்பத் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் கதிர். இந்த படத்தில் அவருடன் இணைந்து காமெடி நடிகர் சூரி மற்றும் நாயகி ரஷயா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. மாஸ்டர் படத்தில் தான் நடிக்க வில்லை என்றாலும், தனது தந்தை நடித்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுகிறார் கதிர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X