பொங்கல் ரேசில் அஜித், ரஜினியுடன் சேர்ந்த கதிர்: ஆனால்...
சென்னை: கதிர் நடித்துள்ள சிகை படமும் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
பரியேறும் பெருமாள் படம் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகியுள்ள கதிர் நடித்துள்ள படம் சிகை. இந்த படத்தில் பிக் பாஸ் 2 டைட்டிலை வென்ற ரித்விகாவும் நடித்துள்ளார்.
கதிர் பெண் வேடமிட்டுள்ள சிகை படம் பொங்கலுக்கு வெளியாகிறது.
பொங்கல்
சிகை படம் தியேட்டரில் அல்ல மாறாக ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. படம் ஜீ5 டிஜிட்டல் பிளாட்ஃபாரமில் வெளியாக உள்ளது. இதை ஜீ5 இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 24 மணிநேரத்தில் ஒருவரின் வாழ்க்கை எப்படி மாறும் என்பதை தெரிவிக்கும் படமாக சிகை அமைந்துள்ளது.
கதிர்
நாங்களும் பொங்கலுக்கு வர்றோம் என்று கதிர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அவரின் கெட்டப்பை பார்க்கும்போதே படத்தை பார்க்கும் ஆவல் ஏற்படுகிறது.
காத்திருப்பு
சிகை படத்திற்காக ரொம்ப நாட்களாக காத்திருந்ததாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் ஆகிய படங்கள் தியேட்டரில் வெளியாகும் நிலையில் சிகை ஆன்லைனில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
தியேட்டர்
கதிரின் கெரியர் பிக்கப் ஆகி வரும் நேரத்தில் சிகை படத்தை ஆன்லைனில் வெளியிட வேண்டாம் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











