நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் நடிகர் கதிரின் படம்... எப்போது தெரியுமா?
சென்னை : பிகில் படத்தைத் தொடர்ந்து கால்பந்தாட்ட வீரராக ஜடா படத்தில் நடித்திருந்தார் நடிகர் கதிர்.
பரியேறும் பெருமாள் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைப் பெற்றுத்தந்த நிலையில் அதைத் தொடர்ந்து மிகச் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக உள்ளார்.
அந்த வகையில் இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் கதிர் நடித்துள்ள சர்பத் திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.

முக்கியமான கதாபாத்திரத்தில்
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக இருக்கும் கதிர் மதயானை கூட்டம் மூலம் அறிமுகம் செய்யப்பட்டதை அடுத்து சமீபத்தில் வெளியான பரியேறும் பெருமாள் இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத்தந்தது. விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சூரியின் காமெடியில்
ஹீரோவாக நடிக்கும் போதும் ஒரு சில முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் இரண்டாம் கதாநாயகனாக நடித்து வரும் இவர் இப்பொழுது இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடித்துள்ள சர்பத் திரைப்படம் கலகலப்பான காமெடி ஜானரில் உருவாகி உள்ளது. இதன் டீசர் ஏற்கனவே வெளியாகி அனைவரையும் கவர்ந்திருக்க இதில் சூரியுடன் இணைந்து காமெடியில் பட்டையை கிளப்பியுள்ளார்.

நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ்
7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாடகர் அஜிஸ் இசையமைத்துள்ளார். நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் போடப்பட்டுள்ள இந்த திரைப்படம் எப்போது திரையில் வெளியாகும் என பலரும் காத்துக் கொண்டிருக்க இப்பொழுது நேரடியாக தொலைக்காட்சியில் ரிலீஸ் செய்யப்படுகிறது.

15 நாட்களுக்கு பிறகு
நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இதன் உரிமையை வாங்கி இருக்க வரும் ஏப்ரலில் இந்தப் படம் கலர்ஸ் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சியில் வெளியான 15 நாட்களுக்கு பிறகு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. கதிர் பரியேறும் பெருமாள் படத்திற்கு பிறகு மீண்டும் ஆனந்தியுடன் இணைந்து புதிய திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











