Don't Miss!
- News
"இதோ டேட்டா பாருங்க".. அண்ணாமலைக்கு எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. வேலையை காட்டிய ஓபிஎஸ்.. என்னாச்சு?
- Technology
WhatsApp மெசேஜ்ஜை அடுத்தவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி? இந்த சீக்ரெட் மோட்-ஐ ON செய்யுங்க.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Automobiles
கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
பணப்பெட்டியுடன் வெளியேறிய கதிர்... எத்தனை லட்சம் தெரியுமா? சரியான ட்விஸ்ட்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் பணப்பெட்டியுடன் கதிர் வெளியேறி உள்ளார்.
அக்டோபர் 9ந் தேதி கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று 100வது நாளை எட்டி உள்ளது.
கடந்த வாரமே பணப்பெட்டி வரும் என்று ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால் பணப்பெட்டிக்கு பதிலாக எவிக்டானவர்கள் உள்ளே வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.
பிக் பாஸ் அசீமுக்கு ஆதரவளித்த பிரசாந்த் ரங்கசாமி.. காசு வாங்கிட்டீங்களா என கலாய்க்கும் ரசிகர்கள்!

பிக் பாஸ் சீசன் 6
பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியதில் இருந்து காரசாரமான சண்டைகள் நடந்தன. நிகழ்ச்சியின் முதல் நாளில் டீக்கு சண்டை போடத்தொடங்கிய அசீம் இப்போது வரை கொஞ்சம் கூட எனர்ஜி குறையாமல் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிறார். அதேபோல, ரசிகர்களால் பூமர் அங்கிள் என்று அன்போடு அழைக்கப்படும் விக்ரமனும் அதே எனர்ஜியோடு இருக்கிறார்.

டைட்டில் யாருக்கு
இந்த சீசனை மிகவும் சுவாரசியமாக கொண்டுச் சென்ற மொத்த பெருமையும் அசீமையைச் சேரும். அவர் டைட்டிலை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பல நேரம் அவர் மற்ற போட்டியாளர்களிடம் நடந்து கொண்ட முறையால் ரசிகர்கள் அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். இதனால், இந்த சீசனின் டைட்டிலை விக்ரமன் வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல மூன்றாம் இடம் ஷிவினுக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

டிக்கெட் டூ பினாலே டாஸ்க்
நாமினேஷனில் சிக்கி குறைவான வாக்குகளை பெற்ற அமுதவாணன், டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றதால் எவிக்ஷனில் இருந்து தப்பித்தார். இதனால், அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த ரச்சித்தா வெளியேறினார். இத்தனை நாள் அமைதியாக இருந்த ரச்சித்தா கடைசி நேரத்தில் அனைத்து டாஸ்குகளையும் சிறப்பாக செய்தார். குறிப்பாக சைக்கிள் டாஸ்கில் இரவு முழுவதும் தூங்காமல் விடிய விடிய சைக்கிள் ஓட்டிய ரச்சித்தா வெளியேறியதால் ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டனர்.

பணப்பெட்டியுடன் வெளியேறிய கதிர்
இந்நிலையில்,பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் 100வது நாளில் பிக் பாஸ் வீட்டிற்குள் பணப்பெட்டி வந்துள்ளது. பணப்பெட்டி என்று சொல்வதைவிட பண மூட்டை என்று சொன்னால் சரியாக இருக்கும், இந்த பண மூட்டையை யார் எடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கதிரவன் பண மூட்டையை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். அந்த பண மூட்டையில் வெறும் 3லட்சம் ரூபாய் இருந்தால், அனைத்து போட்டியாளர்களும் கதிரை எடுக்க வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால், யாருடைய பேச்சையும் கேட்காமல் 3 லட்சம் பணத்துடன் கதிர் வெறியேறினார். அமுதவாணன் பணத்தை எடுப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், ட்விஸ்டாக கதிர் வெளியேறி உள்ளார்.