திட்டமிட்டபடி அக்டோபர் 22-ம் தேதி கத்தி.. லைகா நிறுவனம் அறிவிப்பு!
விஜய் - சமந்தா நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள கத்தி திரைப்படம் திட்டமிட்டபடி வரும் அக்டோபர் 22-ம் தேதி வெளியாகும் என்று லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘கத்தி' படத்தை பற்றியும், அதற்கு எழுந்துள்ள எதிர்ப்பார்ப்பு மற்றும் எதிர்ப்பு குறித்தும் ஒவ்வொரு நாளும் பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஒரு பக்கம் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டணியின் எதிர்ப்பு அச்சுறுத்தலாக இருந்தாலும், 'கத்தி' படத்தை தீபாவளிக்கு வெளியிடும் முடிவிலிருந்து தயாரிப்பாளர்கள் பின் வாங்கும் திட்டத்தில் இல்லை.
சில நாட்களுக்கு முன்பு, தீபாவளி புதன் கிழமை வருவதால் அதற்கு 5 நாட்கள் முன்னதாக அக்டோபர் 17-ந் தேதி தேதியே படத்தை வெளியிடவிருக்கிறார்கள் என்ற செய்தி பரவியது.
ஆனால், திட்டமிட்டப்பட கத்தி படம் தீபாவளியன்று அக்டோபர் 22-ந் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். ஆயிரத்துக்கும் அதிகமான அரங்குகளில் உலகெங்கும் கத்தி வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











