விஜய்யின் "கத்தி" ஜூனியர் என்.டி.ஆர். கைக்கு மாறுகிறது!
சென்னை: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் கத்தி.
தீபாவளிக்கு ரிலீசான இப்படம் ரூ. 100 கோடியையும் தாண்டி வசூல் மழை பொழிந்து வருகிறது. தமிழில் கிடைத்த அமோக வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்ய தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
முதலில் கத்தியின் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணை நடிக்க வைப்பது என முடிவு செய்யப்பட்டு, அவரிடம் கதையும் கூறப்பட்டதாம்.
ஆனால், பவன் கல்யாண் கை விரித்து விடவே, தற்போது கத்தியின் தெலுங்கு ரீமேக்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூனியர் என்.டி.ஆர்.
தற்போது பூரி ஜெகன்நாத் படத்தில் நடித்து வருகிறார் ஜூனியர் என்.டி.ஆர். அப்படத்தை முடித்ததற்குப் பின் கத்திப் படத்தின் முழுவதுமாக பார்த்து விட்டு தனது சம்மதத்தைத் தெரிவிப்பார் எனத் தெரிகிறது.

ஏறக்குறைய உறுதி...
இதன் மூலம் ஏறக்குறைய கத்தி படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவது உறுதியாகி உள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டப்பிங்...
கத்தி படத்தை டப் செய்ய முதலில் தீர்மானிக்கப்பட்டது. தாகூர் மது தான் டப்பிங் உரிமையை வாங்கினார். ஆனால் கத்தி படத்தை ரீமேக் செய்யும் முடிவுக்குப் பின்னர் தயாரிப்பாளர்கள் மாறினர். ரீமேக் உரிமையை வாங்கவும் பலர் முயன்றனர்.

ரீமேக்...
இந்த நிலையில் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ரீமேக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் இடத்தில் ஜூனியர் என்.டி.ஆரா.. நினைத்துப் பார்க்கவே சற்று பயமாகத்தான் இருக்கிறது!


Click it and Unblock the Notifications











