கத்தியா?, சுத்தின்னு பெயர் வைங்கய்யா!: டீஸரை பற்றி ஃபேஸ்புக்கில் கல, கல
சென்னை: கத்தி பட டீஸரை பார்த்த பலரும் அதை ஃபேஸ்புக்கில் கலாய்த்து வருகிறார்கள்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்துள்ள கத்தி படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும் அது குறித்து ஃபேஸ்புக்கில் கலாய்த்து வருகிறார்கள்.
அப்படி என்ன கலாய்க்க இருக்கிறது என்பதை நீங்களே படித்துப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

சுத்தி
கத்தி படத்திற்கு சுத்தி என்று பெயர் வைத்திருக்கலாம். டீஸரில் சும்மா சுத்தி சுத்தி காட்டுகிறார்கள் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

லைகா
விஜய் லைகா தயாரிப்பில் நடித்ததால் தான் கத்தி படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது என்பது அனைவரும் அறிந்ததே. அவர் ஏன் லைகா தயாரிப்பில் நடித்தார் என்பதற்கு ஒருவர் ஃபேஸ்புக்கில் விளக்கம் அளித்துள்ளார்.

நஷ்டம்
விஜய் வேட்டைக்காரன், சுறா ஆகிய படங்களில் நடித்து எப்படி சன் பிக்சர்ஸுக்கு நஷ்டம் ஏற்படுத்தினாரோ அதே போன்று இலங்கை நிறுவனமான லைகாவுக்கு படம் பண்ணி அவர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்படுத்தும் அன்டர்கிரவுண்ட் ஆபரேஷனில் விஜய் உள்ளார். இது தெரியாம அவர போய்...ச்சே.. என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

டீஸர்
கத்தி போஸ்டரிலும் சரி, டீஸரிலும் சரி விஜய் முறைத்துப் பார்க்கும் ஒரே லுக்கை தான் காண்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











