முக்கியச் செய்தி: 'கத்தி' ரூ.100 கோடி வசூல் செய்திருச்சாம்!
சென்னை: விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது.
ஏ.ஆர். முருகதாஸ், விஜய் கூட்டணி இரண்டாவது முறையாக சேர்ந்தது கத்தி படத்திற்காக. அந்த படம் பல்வேறு பிரச்சனைகளை தாண்டி தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது. கத்தி படத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களால் படத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்தது என்றே கூற வேண்டும்.
படம் ரிலீஸான அன்று மட்டுமே ரூ.23.8 கோடி வசூல் செய்து தென்னிந்திய சினிமா வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளதாக முருகதாஸ் தெரிவித்தார்.

ரூ.100 கோடி
கத்தி நிச்சயம் ரூ.100 கோடியை தொடும் என்று படக்குழுவினர் எதிர்பார்த்தனர். இந்நிலையில் கத்தி ரூ.100 கோடி வசூல் செய்துவிட்டது.
அனிருத்
இது குறித்து படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, மிகவும் ஸ்பெஷலான தினம்! #Kaththihitsfastest100cr! படத்தின் வசூல்- ரூ.100.7 கோடி(தமிழகம் ரூ.65.1 கோடி, வெளிநாடு- ரூ.20.2 கோடி, பிற ரூ.15.4 கோடி) என்று தெரிவித்துள்ளார்.
விஜய்
இது கொண்டாட்ட நேரம். #IlayaThalapathy இளையதளபதியின் மற்றொரு படம் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் சேர்ந்துள்ளது என்று ரசிகர்கள் கவனிக்கும் விஜய்யின் ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர்
முதல் நாள் வசூலை தெரிவித்ததற்கே அதை நம்பாமல் பலர் ட்விட்டரில் வார்த்தை(வடை) போர் நடத்தினர். தற்போது கத்தி ரூ.100 கோடி வசூல் செய்துள்ள செய்தியை பார்த்துவிட்டு என்ன கூத்து எல்லாம் நடக்கப் போகிறதோ.


Click it and Unblock the Notifications











