விஜய் "ஓவர்"... அடுத்து அஜீத் பக்கம் பார்வையைத் திருப்பும் முருகதாஸ்!

சென்னை: மீண்டும் நடிகர் அஜீத்தை வைத்து புதிய படம் இயக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்.

தீபாவளியன்று ரிலீசான நடிகர் விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கிய கத்தி படம் வசூல் சாதனை புரிந்து வருகிறது. பல்வேறு தடைகளைத் தாண்டி வெளியான அப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முன்னதாக விஜய் - முருகதாஸ் கூட்டணியில் உருவான துப்பாக்கி படமும் வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2001ம் ஆண்டு அஜீத் நடித்த தீனா படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தவர் முருகதாஸ். ஆனால், அப்படத்திற்குப் பிறகு மீண்டும் அஜீத் - முருகதாஸ் கூட்டணி அமையவில்லை.

விஜயகாந்த்தை வைத்து ரமணா, சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு, விஜய்ய்யை வைத்து துப்பாக்கி, கத்தி என்று டிராக் மாறிப் போய்க் கொண்டிருந்தார் முருகதாஸ்.

இந்நிலையில், மீண்டும் அஜீத்தை இயக்கத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் முருகதாஸ். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது :-

மீண்டும் அஜீத்...

மீண்டும் அஜீத்...

எப்போதும் அஜீத்துடன் இணைய தயாராக இருக்கிறேன். அதேபோல் மீண்டும் சூர்யாவுடன் இணையவும் தயாராக உள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.

கஜினி...

கஜினி...

ஏற்கனவே, சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு உள்ளிட்ட வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் முருகதாஸ் என்பது குறிப்பிடத் தக்கது.

அஜீத்திற்கும் ஓகே...

அஜீத்திற்கும் ஓகே...

இதற்கிடையே, கிடைத்துள்ள தகவலின் படி முருகதாஸ் படத்தில் நடிக்க அஜீத்தும் விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. இப்படத்திற்கான அறிவிப்பு அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

அடுத்து இந்தி...

அடுத்து இந்தி...

கத்தி படத்தைத் தொடர்ந்து முருகதாஸ், இந்தியில் சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து படம் இயக்குகிறார் முருகதாஸ். நாயகிக்கு முக்கியத்துவம் தரும் இப்பட வேலைகள் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ளது.

நேரடிப் படம்...

நேரடிப் படம்...

வழக்கமாக இந்தியில் தனது படங்களையே ரீமேக் செய்தவர் முருகதாஸ். ஆனால் சோனாக்ஷியை வைத்து அவர் இயக்கப் போகும் இந்தப் படம் நேரடி படமாக இருக்குமாம்.

துப்பாக்கியின் ரீமேக்...

துப்பாக்கியின் ரீமேக்...

இதற்கு முன்பு இந்தியில் கஜினி, ஹாலிடே ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார் முருகதாஸ். இதில் ஹாலிடே, துப்பாக்கி படத்தின் ரீமேக் ஆகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X