twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    துப்பாக்கியை விட 10 மடங்கு கூர்மையானதாம் கத்தி!

    |

    சென்னை: துப்பாக்கி படத்தை விட கத்தி படம் 10 மடங்கு பெரிதாக, வீரியமாக இருக்குமாம். இப்படி அப்படக்குழுவினர் கூறுகிறார்கள்.

    கத்தி படத்திற்கு ஒரு பக்கம் கடும் எதிர்ப்புகள் இருந்தாலும் கூட சென்சார் சான்றிதழ் வாங்கி விட்ட மகிழ்ச்சியில் படக் குழுவினர் உள்ளனர். இனிமேல் யார் நினைத்தாலும் அதைத் தடுக்க முடியாது என்ற நம்பிக்கையிலும் உள்ளனர்.

    இந்த சூட்டோடு ரிலீஸ் தேதியையும் அவர்கள் அறிவித்து விட்டனர். இப்போது ரிலீஸ் நாளுக்காக காத்துள்ளனர்.

    இந்த நிலையில் கத்தி படம் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளன.

    10 மடங்கு...

    10 மடங்கு...

    படம் துப்பாக்கி படத்தை விட 10 மடங்கு பிரமாண்டமாக, வீரியமாக இருக்கிறதாம்.

    அனைத்து அம்சங்களும்...

    அனைத்து அம்சங்களும்...

    படத்தின் அனைத்து அம்சங்களும் பெரிதாக பேசப்படுமாம். தயாரிப்பு அளவிலும், கதை அளவிலும், படத்தை எடுத்த விதத்திலும் பிரமாண்டமாக வந்திருக்கிறதாம்.

    பிரமாதமான நடிப்பு...

    பிரமாதமான நடிப்பு...

    விஜய்யின் நடிப்பு துப்பாக்கி படத்தை விட இதில் பிரமாதமாக வந்திருக்கிறதாம். இப்படத்தில் விஜய்யின் நடிப்பு ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமையும் என்று கூறுகிறது தயாரிப்பு தரப்பு.

    சிறப்பான பாடல்கள்...

    சிறப்பான பாடல்கள்...

    படத்தின் திரைக்கதையோட்டம், சண்டைக் காட்சிகள், பாடல்கள் உள்ளிட்ட அனைத்தையும் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் சிறப்பாக செய்துள்ளாராம்.

    விறுவிறுப்பான காட்சிகள்...

    விறுவிறுப்பான காட்சிகள்...

    படத்தின் தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாம். குடும்பத்தோடு பார்க்கும் வகையில் காட்சிகளைப் பார்த்துப் பார்த்து எடுத்திருக்கிறாராம் முருகதாஸ்.

    கேட்டாலே ஆடலாமாம்...

    கேட்டாலே ஆடலாமாம்...

    பாடல்களும், இசையும் தாளம் போட வைக்குமாம். படமாக்கிய இடங்களும் கூட பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்துள்ளனராம்.

    English summary
    How exciting would it be to get some very special news about Kaththi from a peeping-Tom? One such trust-worthy birdie has given us some promising titbits about Kaththi."Kaththi is ten times Thuppakki. It will be huge in all aspects. The production value, story, treatment, approach and of course the numero-uno factor Ilayathalapathy Vijay”.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X