கேரள ரயில்களில் முதல் முறையாக தமிழ் பட போஸ்டர்: 'கத்தி' புதிய சாதனை
திருவனந்தபுரம்: விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் போஸ்டர்கள் கேரள ரயில்களில் ஒட்டப்பட்டுள்ளன.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ள கத்தி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. இந்த படம் தமிழகத்தை போன்றே கேரளாவிலும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் கேரளாவில் கத்தி படம் ரிலீஸாகும் முன்பே புதிய சாதனை படைத்துள்ளது.

போஸ்டர்கள்
கேரளாவில் ஓடும் ரயில்களில் தமிழ் படத்தின் போஸ்டர்கள் ஒட்டும் பழக்கம் இல்லை. இந்நிலையில் முதன்முறையாக ஒரு தமிழ் படத்தின் போஸ்டர்களை ரயில்களில் ஒட்டியுள்ளனர் சேட்டன்கள்.

கத்தி
கேரள ரயில்களில் விஜய்யின் கத்தி பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ரயில்கள்
ரயில்களில் கத்தி படத்தின் போஸ்டர்களை ஒட்டும் கேரள மாநிலத்தவர்கள்.

ரசிகர்கள்
தமிழகத்தை போன்றே விஜய்க்கு கேரளாவிலும் ரசிகர்கள் அதிகம். விஜய் படங்களுக்கு கேரளாவில் நல்ல மார்க்கெட் உண்டு. இந்நிலையில் ரயில்களில் கத்தி படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு நிச்சயம் பெருமகிழ்ச்சி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











