twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கத்தி படத்தை எடுப்பவர்கள் தமிழர்கள் - இயக்குநர் விக்ரமனின் கண்டுபிடிப்பு!!

    By Shankar
    |

    கத்தி என்ற படத்தை எடுப்பவர்கள் தமிழர்கள்தான். அந்தப் படத்துக்கு இயக்குநர் சங்கம் ஆதரவு தரும் என்று கூறியுள்ளார் சங்கத்தின் தலைவர் விக்ரமன்.

    கத்தி படத்தை லைகா புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்துக்கு உறுதுணையாக அய்ங்கரன் நிறுவனம் செயல்படுகிறது.

    Kaththi producer is a Tamilian - Vikraman's new invention

    ஆனால் லைகா நிறுவனம் ராஜபக்சேவின் தொழில் கூட்டாளி என்பது ஏற்கெனவே அம்பலமாகியுள்ளது. ராஜபக்சேவின் அனுமதியுடன்தான் லைகா நிறுவனத்தின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா, இலங்கையில் விமான சேவை தொடங்கினார்.

    மேலும் லைகா நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ராஜபக்சேவின் சொந்த தங்கை மகன்.

    கடந்த ஆண்டு இலங்கையில் நடந்த காமன்வெல்த் வர்த்தக மாநாட்டுக்கு கோல்டன் ஸ்பான்சராக செயல்பட்டு, பல கோடிகளைக் கொடுத்ததும் லைகா நிறுவனம்தான்.

    இப்படி பல வகையிலும் ராஜபக்சேயுடன் பின்னிப் பிணைந்துள்ள லைகா நிறுவனம் கத்தி படத்தை எடுப்பது தெரிந்ததும் தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    ஆனால் இந்த எதிர்ப்பலையை சமாளிக்க தீவிரமாக களப்பணியாற்றியுள்ளனர் நடிகர் விஜய், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் உள்ளிட்டோர்.

    தமிழகத்தில் இலங்கைப் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் அத்தனை தலைவர்களையும் ரகசியமாக சந்தித்துப் பேசி, அவர்களைச் சமாதானப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக முருகதாஸ் இந்த வேலையை கச்சிதமாக செய்து வருகிறார். லைகாவுக்காக படம் பண்ணும் வாய்ப்பையும் பெற்றுத் தருகிறார். இதனால் இதுவரை எதிர்த்து வந்த பலரும், தமிழர் தயாரிக்கும் படம்தானே இது என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

    சமீபத்தில் இயக்குநர் சங்கத் தலைவர் விக்ரமனிடம் இதுகுறித்து கேட்டபோது, "கத்தி படத்தைத் தயாரிக்கும் கருணா மூர்த்தி, சுபாஷ்கரன் இருவருமே தமிழர்கள்தான். இலங்கை தமிழர்கள். அய்ங்கரன் கருணாமூர்த்தி பற்றி எல்லாருக்குமே தெரியும். அவர்தான் முதன்முதலில் ஓவர்சீஸ் மார்க்கெட்டில் தமிழ்ப் படங்களைக் கொண்டு போனவர். அவரது கூட்டாளியான சுபாஷ்கரனும் தமிழர்தான்," என்றார்.

    ராஜபக்சே - லைகா கூட்டணி பற்றியெல்லாம் அவர் பேசவே மறுத்துவிட்டார்.

    ஏற்கெனவே இலங்கைத் தமிழர் பிரச்சினையை கொச்சைப்படுத்தும் வகையில் வெளியான இனம் படத்துக்கும் விக்ரமன் உள்ளிட்ட இயக்குநர் சங்கத்தினர் பெரும் ஆதரவு தெரிவித்திருந்தது நினைவிருக்கலாம்.

    English summary
    Director Vikraman and directors association is supporting Vijay's Kaththi movie and says that the producer is a Tamilian.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X