லைக்கா பெயர் நீக்கம்: கத்தி நாளை ரிலீஸாவது உறுதி
சென்னை: கத்தி பிரச்சனை ஒருவழியாக தீர்வுக்கு வந்தது. படம் அறிவித்தபடியே நாளை தமிழகத்தில் ரிலீஸாகிறது.
கத்தி படத்திற்கு அதன் தயாரிப்பாளர் லைக்காவால் தான் பிரச்சனை ஏற்பட்டது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என சில தமிழ் அமைப்புகள் வரிந்து கட்டிக் கொண்டு நின்றன. இந்நிலையில் படம் நாளை ரிலீஸாகுமா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்த பரப்பான சூழலில் இன்று காலை தியேட்டர் உரிமையாளர்களின் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. படத்தின் விளம்பரம் உள்பட அனைத்தில் இருந்தும் லைக்கா பெயரை நீக்க சம்மதித்து அந்நிறுவனம் கடிதம் அளித்துள்ளது.

இதையடுத்து கத்தி படம் அறிவித்தபடி நாளை தமிழகத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். கத்தி தமிழகத்தில் மட்டும் மொத்தம் 440 தியேட்டர்களில் நாளை ரிலீஸாகிறது.
இந்நிலையில் லைக்கா நிறுவனம் கத்தி சம்பந்தப்பட்டவற்றில் இருந்து தனது பெயரை நீக்குவதாகக் கூறி தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட அமைப்புகளிடம் கடிதம் அளித்துள்ளது. இருப்பினும் நாளை முதல் நாள் முதல் காட்சியை பார்த்த பிறகே போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து தெரிவிக்கப்படும் என்று தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆக நாளை படம் ரிலீஸாவதில் இருந்த சிக்கல் தீர்ந்துள்ளது.
இந்த தகவல் இன்று மாலை நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கத்தி- செல்பி புள்ள பாடல்


Click it and Unblock the Notifications











